சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷத்திரா. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.
நக்ஷத்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் நக்ஷத்திரா சமீபத்திய இன்ஸ்டா பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் நக்ஷத்திரா தன் கணவர் ராகவ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், என்னவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பதே வாழ்க்கை என்பதை எனக்குக் காட்டியதற்கு நன்றி.
உங்களுக்கு இன்னும் பல சந்தோஷங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் பாப்பா, ஐ லவ் யூ ராகவ்!’ என்று உணர்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.
இங்கே பாருங்க.




“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“