சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷத்திரா. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், நாயகியாக நடிக்கிறார்.
Advertisment
நக்ஷத்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் நக்ஷத்திரா சமீபத்திய இன்ஸ்டா பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் நக்ஷத்திரா தன் அப்பாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இனிய நாகு ❤️ மகிழ்ச்சி தான் வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழி என்று எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி அப்பா. கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவை அமைதியைக் கண்டறிவதற்கான திறவுகோல் என்பதை எனக்குக் கற்பித்ததற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்ததற்கும், என்னைக் கவனித்து, அனைத்திலும் எனக்கு ஆதரவளித்ததற்கும் நன்றி.
Advertisment
Advertisements
என் வாழ்நாள் முழுவதும் நீங்கள் என் அருகில் இல்லாதபோதும், அப்பா உங்களை தேட நீங்கள் என்னை அனுமதிக்கவே இல்லை.
இப்போது உங்களைக் கவனித்துக்கொள்வது எனது முறை, நான் உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்தையும் உங்களுக்கு வழங்குவேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் மேலும் உங்களுடன் இன்னும் ஒரு மில்லியன் சாகசங்களை செய்ய காத்திருக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நக்ஷ்த்திரா தன் அப்பாவுடன் எடுத்த படங்கள் இங்கே…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“