வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? திங்களன்று 'நாசா' முக்கிய அறிவிப்பு!

ஆனால், இந்த குழப்பம் வரும் திங்கட்கிழமை வரை தான்...

நம் எல்லோருக்குமே உள்ள விடை தெரியாத அல்லது விடை அறிய முடியாத கேள்வி, “வேற்று கிரகவாசிகள் இருக்காங்களா?” என்பதுதான். இன்றுவரை இதற்கு தெளிவான பதில் என்று ஏதும் இல்லை. ஆனால், இந்த குழப்பம் வரும் திங்கட்கிழமை வரை தான். ஆம்! வரும் திங்கட்கிழமை (June 19) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) ‘வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா?’ என்ற கேள்விக்கு நாசா விடை அளிக்கிறது.

சாதாரணமாக அல்ல… சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். அதுகுறித்த முடிவுகளைத் தான் நாசா அறிவிக்கிறது.

Kepler Telescope

இந்த அறிவிப்பிற்காக, இப்போதே விண்வெளி ஆய்வாளர்களும், வேற்று கிரக வாசிகள் ஆராய்ச்சி குறித்து ஆர்வமுள்ளவர்களும் காத்திருக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் ‘நாசா’ என்ன சொல்லப்போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நாற்காலியின் நுனிக்கே வந்துவிட்டார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல… நமக்கும் தான். ஆனாலும், திங்கட்கிழமை வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

×Close
×Close