இந்த 10 கிரகத்தில் ஏலியன்ஸ் இருக்கலாம்; நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோடிக்கணக்கான விண்வெளி ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் இந்த தகவலுக்காக தான் காத்திருந்தனர்.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய ரகசியங்களையே அறிய, நாசா தனது விண்வெளி தொலைநோக்கியான கெப்லரை பயன்படுத்தி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான விண்வெளி ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் இந்த தகவலுக்காக தான் காத்திருந்தனர்.

நாசாவின் அறிக்கையில், “நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம், 219 புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில், நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலத்தில் உள்ள 10 கிரகங்கள், பூமியின் அளவிற்கு ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கின்றன. இந்த 10 பத்து கிரகங்களிலும் திரவ நீர் காணப்படுகின்றன. இந்த சூழியல் அமைப்புகளால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

இதுவரை கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, மொத்தம் 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளது. அவற்றில், 2,335 கிரகங்கள், சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 கிரகங்கள், பூமியைப் போன்று ஒத்த அளவுடன் நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலத்தில் உள்ளன.

கடைசியாக கண்டறியப்பட்ட 200 கிரகங்கள், இரண்டு வேறுபட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டன. நெப்டியூனை விட சிறியதாக உள்ள வாயு கிரகங்கள் மற்றும் பூமியின் அளவுடைய கிரகங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பொதுவாக, பாறை கிரகங்களை 75% பூமியை விட பெரிதாக உருவாக்கியுள்ளது” என நாசா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nasa reveals alien by using kepler telescope

Next Story
பட்ஜெட் ஸ்மார்ட்போன்… ரூ.6,999 விலையில் “மோட்டோ சி ப்ளஸ்”!motocplus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com