கோவையில் நடைபெறும் செல்லப்பிரணிகளுக்கான கண்காட்சி மற்றும் சர்வதேச பூனைகள் கண்காட்சியில் ககேசியன் ஷெப்பர்ட் என்ற நாய் பங்கேற்பு.
கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் வரும் 8"மற்றும் 9"ம் தேதிகளில் பெட் கார்னிவல் மற்றும் கேட் ஷோ நடக்க உள்ளது. இது குறித்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் உமா மகேஸ்வரன் நிகழ்ச்சி கூறியதாவது. செல்லப்பிராணிகள் கண்காட்சியில் நாய், பூனை, குதிரை, பசு, காளை, பறவைகள், மீன் வளர்ப்பு உட்பட அனைத்து வீட்டு விலங்குகள் காட்சிபடுத்த படுவதாகவும் நாய்கள் மற்றும் பூனைகள் பங்கேற்கும் பேஷன் ஷோக்கள், மேஜிக் ஷோக்கள், நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி எனவும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் விலையுயர்ந்த நாய்கள் காட்சி, வயதுமூத்த நாய்கள் காட்சி, மாணவர்களுக்கு இலவச மீன், இலவச மெஹந்தி போன்றவை கண்காட்சியில் இடம் பெற இருப்பதாகவும்,
சர்வதேச நடுவர்களால் கேட் ஷோ நடத்தப்படும் எனவும் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதியான பூனைகள் இந்திய வம்சாவளி பூனைகள், பாரசீக பூனைகள், நீண்ட முடி பூனைகள் (பாரம்பரிய நீண்ட முடி) மற்றும் அயல்நாட்டு வகை (எக்ஸோடிக் ப்ரீட்-மெயின்கூன், பெங்கால், பிரிட்டிஷ் குட்டை முடி) ஆகியவை தகுதியானவை எனவும், 2 மாதங்களுக்கும் குறைவான பூனைகள், கர்ப்பிணிப் பூனைகள் மற்றும் பிரசவத்தில் இருக்கும் ராணி பூனைகள் போன்றவை போட்டியில் பங்கேற்க தகுதியற்றவை எனவும்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற பெயரில் நாய் கடை வைத்துள்ள சதீஷ், இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதாகவும், ஒரு நாய் விற்பனையாளரிடம் இருந்து ‘ககேசியன் ஷெப்பர்ட்’ என்ற இன நாயை ரூ.20 கோடிக்கு வாங்கி இருக்கின்றார் எனவும், ஒன்றரை வயது நாய்க்கு 'கடபோம் ஹைடர்' என்று பெயர் சூட்டி, அந்த நாய்க்கென தனி குளிரூட்டப்பட்ட அறையை தன் வீட்டில் அவர் ஒதுக்கி உள்ளார் எனவும், இவர் தனது நாயுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.