Advertisment

வீட்டில் கொலு வைக்கிறீங்களா? எந்த படியில் எந்த பொம்மையை வைப்பது?

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதே அது.

author-image
WebDesk
New Update
Navratri 2023

Navaratri 2023 (Image: housing.com)

நவராத்திரி என்பது மகாசக்திக்கான காலம்.

Advertisment

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த ஒன்பது நாட்களும் எவர் வீட்டில் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். குழந்தைகள் கல்வி கலைகளில் சிறந்து திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இந்தாண்டு நவராத்திரி தவிழா, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று.

இந்த ஒன்பது நாளிலும் யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும் அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் வேண்டிக்கொள்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

கொலு எப்படி வைக்க வேண்டும்?

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது.

மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்தத்துவத்தை விளக்கும் பொருட்டே 9 படிகள் வைத்து, அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம்.

அவரவர் வசதிக்கேற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.

இதில் முதல் படியில் மரம், செடி, கொடி ஆகிய ஓரறிவு உயிரினங்கள், இரண்டாவது படியில், நத்தை, சங்கு போன்ற ஈரறிவு உயிரினங்களை வைக்கலாம். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இரண்டாம் படியில் வைக்கலாம்.

எறும்பு, கரையான், சிறு பூச்சிகள், மண் புழு போன்ற மூன்றறிவு உயிரினங்களை மூன்றாம் படியிலும், வண்டு, நண்டு, பட்டாம்பூச்சி  உள்ளிட்ட 4 அறிவு உயிரினங்களை நான்காம் படியிலும் அடுக்க வேண்டும்.

தொடர்ந்து ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிரினங்களான பறவைகள், விலங்குகள் பொம்மைகளை வைக்க வேண்டும்.

Golu Dolls

ஆறாம் படி மனிதர்களுக்கானது. இதில், திருமணங்கள் போன்ற சடங்குகள், வியாபாரம், நடனம் ஆடும் பொம்மைகள், தலைவர்களின்  பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரை வைக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படியில், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.

Navratri 2023 Golu

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தேவியருடன் அமர்ந்திருக்கும் சிலைகளை வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும். இங்கே பூரண கும்பத்தை வைத்து நிறைவு செய்யலாம்.

மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாகத் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே, இவ்வாறு கொலு வைக்க வேண்டும்.

முக்கியமாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள்ளும் அக்கம்பக்கத்திலும் நல்ல இணக்கம் ஏற்படும். அன்பு மேம்படும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment