Advertisment

4.50 கோடி ரூபாய் பணம், வீடு எல்லாம் போனது: நீலிமா செய்தது, சம்யுக்தா செய்யாதது: ஆர்.ஜே. ஷா வீடியோ

நீலிமாவுக்கு 19 வயது, இசைவாணனனுக்கு 29 வயது. இந்த நட்பு இரண்டு ஆண்டுகளிலேயே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neelima

Neelima

பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா. நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisment

நீலிமா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன் வாழ்வில் சந்தித்த இக்கட்டான நிகழ்வுகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.

அதில் சினிமா தயாரிப்பில் 4. 50 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், என்னிடம் வெறும் தாளி செயின் மட்டும் தான் இருந்தது என்று கூறியிருந்தார். இது ஒருபுறமிக்க இப்போது ஜோடி விஷ்ணுகாந்த்- சம்யுக்தா, ஜோடி திருமணம் ஆன ஒருசில நாட்களிலே பிரிந்த  விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து, ஆர்.ஜே.ஷா தனது யூடியூப் சேனலில் பேசிய வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீடியோவில் ஆர்.ஜே.ஷா பேசுகையில், 6 வயதில் தேவர் மகன் படத்தில் நடித்து நீலிமா தனது பயணத்தை ஆரம்பித்தார். பிறகு 19 வயதில், பிரியசகி படத்தில் நடிக்க, இயக்குனர் இசைவாணன் என்பவர் நீலிமாவை அணுகியுள்ளார். அதனால் தான் ஹீரோயினாக அறிமுகமாக வேண்டிய தெலுங்கு சீரியலை கைவிட்டார். ஆனால் அந்த படம் சரியாக நடக்கவில்லை,

அப்போதுதான் இசைவாணன், நீலிமா வாழ்க்கையில் வருகிறார். நீலிமாவுக்கு தன்னால்தான் தெலுங்கு சீரியல் வாய்ப்பு கைகூடாமல் போய்விட்டது, பிரியசகி படத்திலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற குற்ற உணர்வு அவருக்கு இருந்தது.

அப்போதுதான் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது, நீலிமாவுக்கு 19 வயது, இசைவாணனனுக்கு 29 வயது. இந்த நட்பு இரண்டு ஆண்டுகளிலேயே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால், இருவருக்கும் 10 வயது வித்தியாசம். ஆனால் திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைவது தானே.

நீலிமா தன்னுடைய பெற்றோருக்கு சொல்லி புரியவைத்து, இசைவாணனை 2008ல் கரம்பிடித்தார். திருமணம் ஆன ஆறு மாதங்களில் நீலிமாவின் அப்பா இறந்துவிட்டார். நீலிமாவுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு தம்பி இருந்தான். தன் தம்பி படித்து முடித்து வேலைக்கு போகும் வரை, குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு நீலிமா வந்தார். அதை தன் கணவனிடம் சொல்லி புரியவைத்தார்.

அதேபோல, தன்னுடைய தம்பி படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகுதான் நீலிமா குழந்தை பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, 2011ஆம் ஆண்டு, இந்த தம்பதி படம் தயாரிக்க நினைத்தனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் ஃபிஜீ தீவில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது. 55 நாட்கள் ஷூட்டிங். 55 பேரை இங்கிருந்து அழைத்துச் சென்று ஷூட்டிங் எடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 4.50 கோடி ரூபாய் செலவானது.

ஆனால் ஒரு சில நண்பர்கள் முதுகில் குத்தியதால், அந்த படத்தை இவர்களால் வெளியிட முடியவில்லை.

4.50 கோடி ரூபாய் பணம், வீடு எல்லாம் போனது. நீலிமாவிடம் வெறும் தாளி செயின் மட்டுமே இருந்தது. அவர்களிடம் வாடகைக்கு வீடு எடுக்கக் கூட பணமில்லை.

அப்போதுதான் இருவரும், இசைவாணன் நண்பர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்து, வாடகை வீட்டில் தங்கி, அந்த வீட்டையே வாங்கினர்.

இந்த கடனிலிருந்து ஓரளவு வெளியே வர கிட்டத்தட்ட 3,4 வருடங்கள் ஆகிவிட்டது. நீலிமா தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்தார்.  எப்படி கணவர் தன்னை புரிந்து கொண்டாரோ, அதே அளவுக்கு நீலிமாவும் தன் கணவனை புரிந்து வைத்திருக்கிறார்.

10 வயது வித்தியாசம், 15 வருட திருமண வாழ்க்கை, 16 பேர் கொண்ட பெரிய குடும்பம். இப்படி இருந்தும் இரண்டு பேருக்கும் இடையே இந்த புரிதல் இருப்பதற்கு ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் காரணம்.

நீலிமாவின் கணவரை பார்த்து அப்பா மாதிரி இருக்காரு, தாத்தா மாதிரி என சோஷியல் மீடியாவில் பலர் கமெண்ட் செய்வதுண்டு, அ

வருக்கு டை அடிக்கிறது பிடிக்காது, என் குழந்தைங்களுக்கு அவரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்குல பிடிச்சிருக்கு. அவரு அப்படியே இருக்கட்டும். சோஷியல் மீடியாவுக்காக நம்மள மாத்திக்கணும் அவசியமில்ல என்கிறார் நீலிமா.

ஆனால் மறுபுறம் விஷ்ணுகாந்த்- சம்யுக்தா ஜோடி திருமணம் ஆன 15 நாட்களிலே ஒருவரை ஒருவர் மாறிமாறி குறைகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

publive-image

இதைப் பார்க்கும் போது ஒரு விஷயம் தான் சொல்ல தோன்றுகிறது. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ஆக இருந்தால், டைவர்ஸ் வாங்கிவிட்டு போகலாம், சோஷியல் மீடியாவில் வந்து சொல்வதன் காரணமாக எந்த விஷயமும் நடக்க போவதில்லை.

எப்படி நீலிமா வாழ்க்கையில சோஷியல் மீடியாவில் சொல்வதை கேட்டு, நம்ம வாழணும் அவசியம் இல்லன்னு சொல்றாங்களோ, அதேமாதிரி நமக்கு ஒரு பிரச்னை வரும் போது சோஷியல் மீடியாவுல தீர்வு காணம்னு அவசியமில்ல.

வாழ்க்கை என்பது ஒரு 20 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, அப்போது இருக்கும் நெருக்கம் மட்டும் கிடையாது. முகத்துல சுருக்கம் வரும்போது ஒரு 60, 70 வயதுல வர்ற நெருக்கம், அதுதான் மிக உன்னதமான காதல் என்கிறார் ஆர்.ஜே.ஷா

அந்த வீடியோ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment