Bigg Boss 6 Tamil: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இம்முறை 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஆரம்பத்திலே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் மாடல் அழகி நிவாஷினி.
Advertisment
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நிவாஷினி (24) தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தந்தையும், தாயும் பிரிந்த நிலையில், நிவாஷினி தன் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தார். அவரது தாயார் பரமக்குடியைச் சேர்ந்தவர். நிவாஷினிக்கு பிரவீனா என்ற ஒரு அக்காவும் இருக்கிறார்.
நிவாஷினி, சிங்கப்பூரில் உள்ள டாமாய் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பிறகு இங்கிலாந்தில் உள்ள லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.
நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். அதைப் பார்த்து ஏராளமான ஃபாலோயர்ஸ் அவரை பின்தொடர்ந்தனர். அது அவருக்கு ஊக்கமளிக்க, நிவாஷினி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.
Advertisment
Advertisements
சிங்கப்பூரில் வெப்சீரிஸ், குறும்படங்களில் நடித்த நிவாஷினிக்கு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நிவாஷினி ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட. மேலும் கான்டினோ மீடியா மற்றும் அவ்ஃபுலி சாக்லேட் ஆகிய நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.
நிவாஷினி ஒரு நீண்ட கால உறவில் இருந்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. சில காரணங்களால் அந்த உறவு முடிவுக்கு வந்தது.
நிவாஷினி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. பிக் பாஸில் நுழைவது அவருக்கு ஒரு கனவு நனவாகும் தருணம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“