நிவாஷினி, குயின்சி ஸ்டான்லி இருவரும் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகினர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிவாஷினியும், குயின்சியும் நெருக்கமான தோழிகளாக இருந்தனர். பிபி வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் இருவரும் தங்கள் நட்பை தொடர்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், நிவாஷினி பிறந்தநாளை முன்னிட்டு, குயின்சி இன்ஸ்டாராகிராமில் இருவரும் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து , வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அதில், ”என்னுடைய சிறந்த தோழி
என் ஆத்ம சகோதரி
என் குழந்தை
என் பாய் ஃபிரென்ட்
நான் செல்ல விரும்பும் நபர்
என்னுடைய பாதுகாப்பான இடம்
இந்த ஆண்டு எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கட்டும்.. மேலும் பலர் உன் இதயத்தை அறிய விரும்புகிறேன்..உன்னில் உள்ள குழந்தையை ஒருபோதும் இழக்காதே, எப்போதும் என்னுடன் இருப்பதற்கு மிக்க நன்றி.. நீ உலகிற்கு தகுதியானவள்❤️✨️
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிவாஷினி” என்று அதில் பதிவிட்டுள்ளார். இதற்கு நிவாஷினி ஐ லவ் யூ என்று கமென்டில் பதில் அளித்தார்.
இங்கே பாருங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“