ரூ.9,499 விலையில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்தது நோக்கியா 3!

ஆண்ட்ராய்ட் நௌகட் 7.1 இயங்குதளத்தில் செயல்படும்

நேக்கியா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. தற்போது ஆன்லைனிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ள முடியும்.

எச்ம்டி குளோபல் நிறுவனமானது இந்தியாவில் நேக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6, நோக்கியா ஆகிய ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதில், முதலாவதாக நேக்கியா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

நேக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் இணைதளத்தை தவிர்த்து மொபைல் ஸ்டோர்களில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது ஆன்லைனிலும் நோக்கியா 3, விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி குரோமா இணையதளத்தில் நோக்கியா 3, ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும்.

நோக்கியா 6, ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா 6-க்கான முன்பதிவு ஜூலை 14-ம் தேதி அமேசானில் தொடங்குகிறது.நோக்கியா 6, ஜூலை மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நோக்கியா 5, ஸ்மார்ட்போன் ஜூலை முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது.

நோக்கியா 3, ஸ்மார்ட்போன் ரூ.9,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனாலும், அதன் விலை ரூ.10,299 என்றும், டிஸ்கவுன்ட் விலையில் ரூ.9,499-க்கு விற்பனை செய்யப்படுவதாக குரோமா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா 3

நோக்கியா 6 மற்றும் நோக்கியா 5 போன்றே நேக்கியா 3-யின் டிசைனும் உள்ளது. ஆனால், அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மெட்டல் உடலமைப்பை கொண்டிருக்கிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக கருதப்படும் நேக்கியா 3 பிளாஸ்டிக் உடலமைப்பை கொண்டிருக்கிறது.

  • 5 இன்ச் எச்டி டிஸ்பிளே
  • 2 ஜிபி ரேம்,
  • 16 ஜிபி ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128 ஜிபி வரை எக்ஸ்பான்டபிள் செய்து கொள்ள முடியும்)
  • முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என 8 எம்பி கேமரா
  • 2650 எம்ஏஎச் பேட்டரி,
  • வைபை, ப்ளூடூத், மற்றும் 4 ஜி எல்இடி நெட்வொர்க் சப்போர்ட்.
  • கலர்ஸ்: ப்ளாக், சில்வர் வொய்ட், டெம்பர்டு ப்ளூ, காப்பர் வொய்ட்
  • ஜி சென்சார், லைட் சென்சார், இ-காம்பஸ், கிரையோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், என்எப்சி ஷேரிங் ஆகிய சிறப்பம்சங்களும் உள்ளன.

தற்போது இந்த நோக்கியாவின் மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்ட் நௌகட் 7.1, இயங்குதளத்தில் செயல்படும் என்றும், வரும் காலங்களில் அது ஆண்ட்ராய்ட் ஓ-விற்கு அப்டேட் செய்யப்படும் என எச்எம்டி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close