நோக்கியாவின் 3310 மொபைல் மாடல் இந்தியாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டுளள்து. வரும் மே 18-ஆம் தேதி முதல், இந்தியாவில் உள்ள கடைகளில் இந்த ஃபோன் கிடைக்குமாம். இதில் ஆச்சர்யமிக்க செய்தி என்னவெனில் இதன் விலை தான்... ரூ.3310 தான் இதன் விலையாம். ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தான் இந்த மாடல் நோக்கியா மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மொத்தம் நான்கு நிறங்களில் இந்த மாடல் மொபைல்கள் இந்தியாவில் கிடைக்குமாம். வார்ம் ரெட், மஞ்சள், அடர் நீலம் மற்றும் க்ரே நிறங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது.
https://www.youtube.com/embed/tCvxFehepko
சிறப்பம்சங்கள்:
இந்த நோக்கியா 3310 மாடல் மொபைலில், 2.4இன்ச் QVGA திரை, 1200 mAh பேட்டரி வசதி உள்ளது. இந்த பேட்டரி கொண்டு தொடர்ச்சியாக 22.1 மணி நேரம் பேச முடியுமாம். மேலும், 16எம்பி உள்சேமிப்பு வசதி, 3.5mm ஹெட்போன் ஜேக், 2எம்பி எலஇடி ஃபிளாஷ் வசதி கொண்ட பின்பக்க கேமரா உள்ளது. இரட்டை சிம் (மைக்ரோ) பயன்படுத்த முடியும்.