scorecardresearch

தெரு ஆட்டோவால் அடைந்தது என்ன? இழந்தது என்ன ?

ஒவ்வொரு  ஆட்டோவும்  ஒரு அரசியல் மேடை, ஒரு திராவிட கொள்கை, ஒரு அரசு இயந்திரம் , ஒரு சின்ன மனமாற்றம்.  மக்கள் ஜனநாயகத்தில் ஆட்டோ, ஒரு  புதுவகையான வண்ணத்தை, கற்பனையை உருவாக்கியது.

தெரு ஆட்டோவால் அடைந்தது என்ன? இழந்தது என்ன ?
Ola Vs Auto Debate – ola Auto Fierce Competition

Auto Rickshaw Economy :  ‘இளம் தலைமுறையினர் ஓலா கேப் பயன்படுத்துவதால் பொருளாதார மந்தநிலை’  என்கிறது நிதி அமைச்சகம்.  உள்துறை அமைச்சகமோ, ‘இந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது’ என்கிறது. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஓலா கேப் இயல்பான சாலைகளில் கண்டறியப்பட்ட வெகுஜன அரசியலையும் மறைத்துவிட்டது, மறந்துவிட்டது  என்பதை நிரூபித்தாலே பொருளாதார மந்த நிலைக்கான பதிலை நம்மால் மௌனமாய் உணர முடியும்.

ஒவ்வொரு பயணமும் வெவ்வேறு அரசியலை தருகிறது. அதேபோல் எல்லா அரசியல் கதைகளும் ஒரு பயணங்களாகவே நம் கண்முன் வந்து மறைகிறது. பயணம் என்பது வெறும் இடம் பெயர்தல் மட்டுமல்ல. அது, ஒரு வகையான அனுபவம், விவாதம், நாடக மேடை.

ஓலா பயணம்:  

இன்று நகர மக்கள் வாழ்க்கையில் OLA – பயணம் ( Ola ஆட்டோ, Ola Micro ,OLA Prime, OLA Mini ,Ola Share ) இன்றியமையாததாகிவிட்டது . OLA பயணம் தரும் வேகம் , அதன் வாசம், காரியத்தை முடிக்கும் திறன், நுகர்வோர் திருப்தி, அமைதியான ஸ்மார்ட்டான ஓட்டுனர், ராஜாங்கம் ….. எல்லாம் மிடில் கிளாஸ் நகர மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

ஆனால், OLA பயணத்தில்  அரசியல் உள்ளனவா ? அடுத்த, சூப்பர் ஸ்டார் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தை  ஏற்பாரா ? ஓலா பயணம் மனித மொழிகளுக்குள் உட்பட்டதா ? என்ற  இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவதற்காக OLA ஆட்டோ ஓட்டுநர் XXXXXXXX அவரிடம் சில கேள்விகளை கேட்டோம் .

 

அய்யா: Algorithm, Geo Spatial Computing , big data , Artificial Intelligence, Informational Asymmetry –  இவைகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

அவர் : இல்ல ! எனக்கு தெரியாது

அய்யா: OLA- வில் பயணம், இன்சென்டிவ் விலையை யார் நிர்ணயம் செய்வது யார் கணக்கு செய்கிறார்கள் ?

அவர் : மும்பையில் உள்ளவர்கள் கணக்கு செய்வார்கள் என்றார் !!!

அய்யா : இந்த கட்டுரையில் உங்கள் பெயர் புகைப்படம் போடலாமா?
அவர் : நீ வேற சும்மா இரு ?

இந்த உரையாடலின் நாம் புரிந்துகொள்வது  –  ஓலா பயணத்தில் வெளிப்படைத்தன்மையும் இல்லை ! அரசியலும் இல்லை !

OLA பயணம் என்றுமே ஒரு தனி மனித பயணம் . ஒரு குடும்பமாக பயணம் செய்தாலும் ஒவ்வொருவரும் தனி மனிதனாகவே ஓலா பயணத்துக்குள் வாழ்கின்றோம் . மொழி , கலாச்சார விவாதம் இல்லாத இடம் OLA பயணம். அந்த கூகுள்  மேப் (Google Map-) நமது சாலைகளின் வரலாறுகளை சொல்ல தயாராக இல்லை .  OLA பயணம் மனித மொழிகளுக்கு அப்பாற்பட்டது . ஒட்டு மொத்த பயணமும் ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் (One Time Password). பேரம் பேச வேண்டியது இல்லை Algorithm-மே விலையை தீர்மானித்துவிடும் . சரியோ, தவறோ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எந்த ஓலா டிரைவராவது தனது பயணியிடம் விவாதித்திருப்பாரா? பேச்சை எடுத்திருந்தால் உடனே ஜீரோ ரேட்டிங்.

நாம் தொலைத்தது வெறும் பேச்சு சத்தம் மட்டுமல்ல ஒரு சின்ன உரையாடல், மனமாற்றம் , ரகசியம் , சாலைகளின் ஞாபகங்கள், உள்ளூரில் ஆரம்பித்த உலக அரசியல். என்னை பொறுத்த வரையில், இந்த பேச்சு சத்தம் இல்லாத இடத்தில் தான் இந்தியா பொருளாதாரத்தின் மந்தநிலை ஆரம்பமாயிற்று. ஜனநாயக சத்தங்கள் மௌனமாக்கப்பட்டது.

Ola பயணத்திற்கு முன்பு நாம் பயணம் செய்த ஒவ்வொரு  ஆட்டோவும்  ஒரு அரசியல் மேடை, ஒரு திராவிட கொள்கை, ஒரு அரசு இயந்திரம் , ஒரு சின்ன மனமாற்றம்.  மக்கள் ஜனநாயகத்தில் ஆட்டோ, ஒரு  புதுவகையான வண்ணத்தை, கற்பனையை உருவாக்கியது. தமிழ்நாட்டு முகவரியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததே அந்த ஆட்டோக்கள் தான் .

பழைய ஆட்டோவில் ஒரு அரசியல் இருந்தது .பேரம் பேச வாய்ப்பு இருந்தது . ‘அண்ணா ரேட் கம்மியா சொல்லுங்கன்னா’ என்ற வசனத்தில் தான் முக்கால்வாசி மக்களின் அரசியல் ஆரம்பமாயிற்று .

“நாம் இருவர் நமக்கு ஒருவர்”
“பிரசவத்திற்கு இலவசம்”
“அரசியல் பேசாதே”
“குடித்தால் கிட்னி போகும் படித்தால் பட்டினி போகும்”

என்ற வாசகங்களின் அடிப்படையில் ஒரு ஆட்டோவை தேர்ந்தெடுந்தோம் …  கார்ல் மார்க்ஸ் , காந்தியை விடவும் , ஆட்டோக்களின் வாசகம் வலிமையாய் இருந்தது என்பதே உண்மை

தற்காலிக OLA ஆட்டோவில் இந்த வசனங்கள் தேவை இல்லை , இருந்தாலும் படிக்க மனம் வரவில்லை. ஏனெனில் படிப்பதற்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டோம் .

இந்த கட்டுரைக்காக, OLA- வில் சேராத ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் பேசினோம்.

அய்யா: உங்கள் ஆட்டோ ஸ்டேண்ட் பெயர் ?
ருக்ம மதன் : வீர கணபதி ஆட்டோ ஸ்டேண்ட்.

அய்யா: உங்கள் ஆட்டோ ஸ்டேண்ட் பற்றி சொல்லுங்கள் ?
ருக்ம மதன் : அம்ப்த்தூர் ஓ.டி பொறுத்தவரையில் இது தாய் ஸ்டேண்ட்! 38 வருசமா இருக்குது

அய்யா : உங்கள் ஆட்டோ ஸ்டேண்டின் தனிப்பட்ட சாதனை என்று என்ன சொல்வீர்கள் ?
ருக்ம மதன் : இது ஒரு தகவல் மையம். ஏதாச்சும் ஒரு பிரச்சனைனா காவல் துறைக்கு வெளிப்புற ஆட்கள் முதலில் தகவல் போவது எங்க ஆட்டோ ஸ்டேண்ட்ல இருந்து தான் !

அய்யா : Ola-வை பற்றிய உங்கள் கருத்து ?
ருக்ம மதன் : சந்து பொந்தெல்லாம் போக வேண்டியது இருக்கு  கூட கொஞ்சம் பாத்து கொடுங்க சார் என கேட்டோம் ,  ஓலா இன்னைக்கு  பீக் ஹவர்ஸ்னு சொல்லுது.

அய்யா : இந்த கட்டுரையில் உங்கள் பெயர் புகைப்படம் போடலாமா?
ருக்ம மதன் : ஒன்னும் பிரச்னை இல்ல போடுங்க ! இன்னும் விஷயம் வேணும்னா சங்கத்து முகவரி தர்ரேன் போயி பேசுங்க…

எல்லா ஆட்டோக்கார்களும் ஆட்டோ ஸ்டேண்ட்களும் நம்மிடம் கடைசியாய் பேச துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அது ஒரு தகவல்.

நம் ஜனநாயக அரசியலுக்கு தேவைப்படக்கூடிய தகவல்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Ola economic slowdown ola travel ola vs auto competition auto and tamilnadu politics