ரூ. 32,999 விலையில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட் போன் அறிமுகம்!

ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மும்பையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் அலுமியனாத்தால் ஆன வெளிப்புற உடலமைப்பை பெற்றுள்ள இந்த ஒன்ப்ளஸ்5. ஹோம் பட்டனுடன் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் வசதி உள்ளது. 4ஜி வோல்ட் நெட்வொர்க் சப்போர்டுடன் டுயல் சிம் கார்டு பொருத்திக்கொள்ளலாம்.

கேமரா: 16 எம்.பி + 20 எம்.பி(டெலிபோட்டோ லென்ஸ்) டுயர் ரியர் கேமரா. மேலும், பிஃளாஸ் உடன் கூடிய 16 எம்.பி செல்ஃபி கேமரா. 4கே வீடியோ ரெக்கார்டிங்.

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் 3,300 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டாஸ் சார்ஜ் மூலமாக அரை மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம் என்றும், இது நாள் முழுவதுக்கும் போதுமானதாக இருக்கும் என ஒன்ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 பிராசஸ்சர் உள்ளது. மிட்நைட் ப்ளாக், ஸ்லேட் க்ரே ஆகிய இரண்டு கலர்களின்ல் ஒன்ப்ளஸ் 5 வெளிவருகிறது.

குறிப்பிடும்படியாக இரண்டு வகையான ஸ்டோரேஜ்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. அதன்படி 6GB/8GB ரேம், 64GB/128GB ரோம் என பயன்பாட்டிற்கு ஏற்ப எந்த போன் தேவை என தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் $479 என்ற விலையில் ஒன்ப்ஸஸ் 5 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ரூ. 32,999 மற்றும் ரூ.37,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைனில் அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் என்ற அடிப்படையில் பாக்கும் போது ரூ.32,999 என விலை நிர்ணயம் செய்யப்படலாம். மேலும் 8 ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் எனும்போது ரூ.36,000-ரூ.38,000 என்ற விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பிடத்தை பொறுத்து அதற்கேற்ற கலர் டெம்பரேச்சரை மாற்றிக் கொள்ளும் வசதி ஒன்ப்ளஸ்5-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேய சுற்றுப்புறத்தில் உள்ள ஒளிக்கு ஏற்ப கலர் டெம்பரேச்சரை மாற்றிக் கொள்ளும் வசிதி முதன் முதலாக இந்த ஸ்மார்ட் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

×Close
×Close