இன்றைய வேகமாக நகரும் வாழ்க்கையில், சமையல் என்பது கடினமான வேலையாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சமையல் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுவையில் எந்த சமரசமும் இல்லாமல் உங்கள் சமையல் திறன்களை மேம்படுத்தவும் உதவும்! ஒரு அதிசய சமையல்காரராக மாறுவது மற்றும் மின்னலைப் போல விரைவாக சமைப்பது எப்படி என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?
Advertisment
வெங்காயம் வெட்ட
வெங்காயம் ஒவ்வொரு இந்திய உணவின் ஆத்மா! இருப்பினும், வெங்காயத்தை நறுக்குவது கண்ணீர் வரவழைக்கும். அவற்றை ஸ்டைலாக வெட்ட சில சமையல் ஹேக்குகள் இங்கே உள்ளன.
உங்கள் கண்களில் எரிச்சலைத் தவிர்க்க வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் சுமார் 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும். மேலும் வெங்காயத்தை தோல் உரித்து தண்ணீரில் போடலாம். இதனால் கண்களில் எரிச்சல் இருக்காது.
ஆனியன் சாப்பர்ஸ் (onion choppers) உங்கள் வேலையை எளிதாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வெங்காயத்தை சாப்பரில் வைத்து, பட்டனை தட்டினால் மட்டும் போதும். வெங்காயம் தயாராகிவிடும்.
பழங்களை சேமிக்க
பழங்கள் வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் சிறந்த மூலமாகும். இருப்பினும், அவற்றை வெட்டுவது மிகவும் கடினமான பணியாகும், குறிப்பாக அன்னாசி அல்லது மாதுளை பழங்களை கையாளும் போது. வெட்டப்பட்ட பழங்கள் பழுப்பு நிறமாகாமல் இருக்க உலர்ந்த மற்றும் காற்று புகாத டப்பாவில் அதை சேமியுங்கள்.
ஆப்பிள் வெட்டும் போது அது பழுப்பு நிறத்துக்கு மாறுகிறது இதைத் தடுக்க, சேமித்து வைக்கும் முன் ஆப்பிள் துண்டுகளை உப்பு நீரில் நனைக்கவும் அல்லது எலுமிச்சை சாற்றை தடவுவம். இந்த வழியில், ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தவிர்த்து, ஆப்பிள் பழுப்பு நிறமாவதை தடுக்கலாம்.
பழங்களை ஃபிரிட்ஜில் அதிக நேரம் சேமிக்கும் போது, பழங்களை ஒரு அலுமினிய ஃபாயில் தாளில் போர்த்தி அல்லது துணி கவரில் வைக்கவும். இது பழங்களின் ஆயுளை அதிகரிக்கிறது. வாழைப்பழங்களை தனித்தனியாக பிரிட்ஜில் வைப்பதன் மூலம் அதை நீண்ட காலம் சேமிக்கலாம்.
பழங்கள் விரைவாக பழுக்க, காற்று புகாத டப்பாவில் வைக்கவும். பழங்களை ஒரு அரிசி டிரம்மில் வைப்பது பழமையான தொழில்நுட்பம். இதனால் பழங்கள் வழக்கத்தை விட வேகமாக பழுக்க வைக்கும்.
அடுத்தமுறை இந்த எளிய சமையல் ஹேக்குகளை பயன்படுத்தி, சமையல் செயல்முறையை எளிதாக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“