போட்டோவைப் பார்த்து ஏமாறாதீங்க… ஆன்லைன் ஆடைகள் ஷாப்பிங் அசத்தல் டிப்ஸ்

உங்கள் உடலமைப்பிற்கு எந்த மெட்டிரியல் சிறந்தது என்பதைத் தெரிந்து வாங்கினால், ஏமாற்றம் இருக்காது.

Online shopping dress purchasing in online alert tips tamil news 
Online shopping tips

Online Shopping Alert Tamil News: சாதாரண நாள்களிலேயே ஆன்லைனில் துணிகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. இந்த பேண்டமிக் காலகட்டத்தில் சொல்ல வேண்டுமா என்ன? பிறந்தநாள் முதல் திருமண நாள் வரை, அனைத்து முக்கிய தினங்களுக்கும் தற்போது ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்பவர்கள்தான் அதிகம். ஆனால், அப்படி ஷாப்பிங் செய்யும் போது உடைகளின் அளவு, நிறம், தரம் மற்றும் டெலிவரியில் ஏற்படும் சந்தேகங்கள், குளறுபடிகள், தரமில்லாத பொருளை ரிட்டர்ன் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என நமக்கு எழாத கேள்விகளே இருக்காது. இதுபோன்ற குழப்பங்களுக்கான விடையை இனி பார்க்கலாம்.

அளவு மற்றும் சைஸ் சார்ட்

இருப்பதிலேயே சரியான அளவை கண்டுபிடிப்பதுதான் மிகப் பெரிய சவால். ஒவ்வொரு பிராண்டிலும் வெவ்வேறு அளவுகள் இருக்கும். அதனால், எளிதில் குழப்பமடைந்து விடுவோம். ஆனால், உங்களுடைய உடலமைப்பின் அளவுகளைத் தெரிந்துகொண்டால், எந்த தளத்திற்குச் சென்று எந்த பிராண்டில் துணிகளை வாங்கினாலும், கச்சிதமாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்த தையல் கலைஞரிடம் உங்கள் உடல் அளவுகளை அளந்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், வீட்டிலேயே மெஷரிங் டேப் வைத்து அளந்துகொள்ளலாம். ஆனால், அளவு எடுக்கும்போது நிச்சயம் கனமான துணியை அணிந்திருக்கக் கூடாது. மெல்லிய ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இது சரியான ஃபிட்டிங்க்கு வழிவகுக்கும்.

அதேபோல பெண்கள் ‘பேடட் உள்ளாடை’ அல்லது ‘ஷேப்வியர்’ போன்றவற்றை அணிவதைத் தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் வாங்கும் உடைகளின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் அளவுகளை, நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் சைஸ் சார்ட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். அவ்வளவுதான்.. இனி நிச்சயம் அளவுகளில் எந்த சிக்கலும் இருக்காது.

விமர்சனங்களில் கவனம்

பலர். தளத்தில் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பார்த்துவிட்டு அவற்றை வாங்கிவிடுவார்கள். அவர்கள் விசிட் செய்யும் தளம் மற்றும் அதிலிருக்கும் பொருள்கள் பற்றிய தரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைக்க மாட்டார்கள். ஆனால், தரமான துணிகளை வாங்குவதற்கு, பழைய வாடிக்கையாளர்களின் விமர்சனங்களைப் பார்ப்பது அவசியம். இந்த விமர்சனங்கள்தான் அந்தத் தளத்துக்கான ஸ்டார் மதிப்பீட்டின் உண்மைத்தன்மையை உணர்த்தும். எனவே தளம் மற்றும் தளத்தினுள் நீங்கள் விரும்பும் உடையின் அளவு, நிறம் போன்றவற்றின் உண்மைத் தன்மை, அதன் நிறை குறைகளையும் விமர்சனத்தின் மூலம் தெரிந்துகொண்ட பிறகு பர்ச்சேஸ் செய்வது நல்லது.

அதுமட்டுமின்றி ரிட்டர்ன் மற்றும் கஸ்டமைசேஷன் ஆப்ஷனிலும் கவனமாக இருங்கள். உங்களுடைய விமர்சனங்களையும் பதிவு செய்வது, வருங்கால வாடிக்கையாளர்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

Online shopping dress purchasing in online alert tips tamil news 
Online dress purchasing tips

தரமான மெட்டீரியல்தானா

புகைப்படங்களைப் பார்த்ததும், விலையைக்கூடக் கருத்தில் கொள்ளாமல், கண்மூடிக்கொண்டு ஆடைகளை வாங்கும் ஏராளமானோர் இங்கு இருக்கிறார்கள். ஆனால் வாங்கும் உடையின் மெட்டிரியலை சரிபார்க்கப் பலர் தவறிவிடுகின்றனர். நாம் கொடுக்கும் பணத்திற்குத் தகுதியான ஆடைகள் வாங்குவது முக்கியம். காட்டன், பாலியஸ்டர், க்ரேப் சில்க், லினன், ஜூட், விஸ்கோஸ் என இப்படி ஏகப்பட்ட துணிவகைகள்
கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் உடலமைப்பிற்கு எந்த மெட்டிரியல் சிறந்தது என்பதைத் தெரிந்து வாங்கினால், ஏமாற்றம் இருக்காது.

எனவே, மெட்டிரியலின் தரத்தைச் சரிபார்த்து வாங்குங்கள். குறிப்பிடப்பட்டிருக்கும் மெட்டிரியல்களில் சந்தேகம் ஏற்பட்டால், அதைப் பற்றி நன்கு தெரிந்த பிறகு வாங்குவதில் தவறில்லை.

நிறமே ஆபத்து

மொபைல், லேப்டாப், ஐ-பேட் என வெவ்வேறு எலக்ட்ரானிக் பொருள்களின் டிஸ்ப்ளே மாறுபடுவதால், நாம் இணையதளங்களில் பார்க்கும் பொருளின் நிறமும் மாறுபடும். அதனால், நிறங்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது நல்லது.  இல்லையென்றால், இரண்டு மூன்று வெவ்வேறு டிஸ்பிளேவில் ஆடைகளின் நிறத்தைச் சரிபார்த்து வாங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Online shopping dress purchasing in online alert tamil news

Next Story
ஆக சிறந்த காலை உணவு காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com