ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வைட்டமின்கள் நிறைந்தவை. நாம் அனைவரும் ஆரஞ்சு பழத்தின் ஜூசி சுவைகளை மட்டுமே அனுபவிக்க விரும்புகிறோம், ஆனால் தோல்களை எறிந்து விடுகிறோம். அடுத்த முறை ஆரஞ்சு பழம் வாங்கும் போது, தோலை தூக்கி எறிய வேண்டாம், ஏனென்றால் இதில் மறைந்திருக்கும் நன்மைகள் ஏராளம்.
Advertisment
ஆரஞ்சு தோலின் சில பயன்கள் இங்கே உள்ளன.
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழத் தோல்கள் கூட வைட்டமின் சி-யின் வளமான மூலமாகும். பாலிபினால்கள், தாவர கலவை, ஆரஞ்சு தோலில் நிறைந்திருப்பதால், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நாட்பட்ட நோய்களைப் பராமரிக்கவும், எதிர்த்துப் போராடவும் இது உதவுகிறது.
ஆராய்ச்சியின் படி, ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் பாலிபினால் உள்ளடக்கம் அதிகம். ஆரஞ்சு தோல்களில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் லிமோனைன் நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த பழத்தின் தோல்கள் அதிக நார்ச்சத்து கொண்டவை, இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
Advertisment
Advertisements
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் அதிக உள்ளடக்கம் சருமத்தை ஒளிரச் செய்கிறது.
நீங்களே சொந்தமாக வீட்டில் ஆரஞ்சு தோல் பொடி தயார் செய்யலாம். இது சருமத்தை இயற்கையாக பிரகாசமாக்கும். இது ஒரு சிறந்த பிளாக் ஹெட் ரிமூவராகவும் செயல்படுகிறது. இதனை தினமும் முகம் முழுவதும் ஸ்க்ரப் செய்வதன் மூலம், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை நீக்கவும் உதவும்.
ஆரஞ்சு தோல் பொடி எப்படி செய்வது?
ஆரஞ்சு பழத்தோல்களை நிழலில் காய வைக்கவும். அவை நன்றாக உலர்ந்ததும், தோல் நன்றாக தூளாக மாறும் வரை மிக்சியில் அரைக்கவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் அல்லது ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
உங்களுக்கு பளபளப்பான முகம் வேண்டுமா? கண்டிப்பா இந்த ஆரஞ்சு தோல் பொடியை டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“