New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Oviya.jpg)
Oviya
Oviya
2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘களவாணி’ படம் மூலம் ஓவியா தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பிறகு ஓவியா, தமிழ் மக்களிடமிருந்து ஏகபோக அன்பைப் பெற்றார். அப்போது ஆரவ் உடனான அவரது கெமிஸ்ட்ரி, முதல் சீசனில் அதிகம் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும்.
ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓவியா பாதியிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். “நீங்க ஷட்டப் பண்ணுங்க”, ”ஸ்பிரே அடிச்சுப்புடுவேன்” என்ற அவரது டயலாக் அப்போது மிகவும் வைரல் ஆனது. தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக சோஷியல் மீடியாவில் ஆர்மிக்களை அறிமுகப்படுத்தியதே ஓவியாவின் ரசிகர்கள் தான்.
ஒரு நேர்காணலில், ஓவியா தனது ரசிகர் பட்டாளம் பற்றி பேசுகையில், ‘எனக்கு இதெல்லாம் முக்கியமில்லை. இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் நான் வெகு தொலைவில் இருக்கிறேன். மக்கள் என்னிடம் அன்பு காட்டும் விதம் எனக்குப் பிடிக்கும், நான் வெளியே செல்லும்போது என்னுடன் செல்ஃபி எடுப்பது எனக்குப் பிடிக்கும், ஆனால் அது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை, ஒருவேளை எனக்கு ஆர்மி இல்லாமல் போனால், அது என்னைத் தொந்தரவு செய்யாது.
அவர்களுக்கு என்னைத் தெரியும், எனக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது, எனக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், எனது ரசிகரிடம் பேச முடியாது. அவர்கள் என்னை நேசிப்பதை நான் விரும்புகிறேன், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனக்கு ஆர்மி இல்லையென்றால் எதிர்காலத்தில் நான் கவலையடைய கூடாது. நான் என் மனதை நன்றாகப் பயிற்றுவிக்கிறேன். யாரோ ஒருவர் எனக்கு அன்பைக் கொடுப்பதை நிறுத்தும்போது என்னால் அதைக் கையாள முடியாது, எனவே நான் அதை இந்த வழியில் சமநிலைப்படுத்துகிறேன் என்று ஓவியா கூறினார்.
இப்போது ஓவியா மிகவும் உடல் மெலிந்து, ஆளே வேறொருவர் போல இருக்கிறார். ஓவியா மிகவும் அரிதாகத் தான் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவார்.
அப்படி ஓவியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது. அதில் ஓவியா ஹஸ்கி நாய்கள், பூனையுடன் கேஷூவல் லுக்கில் இருக்கிறார். இதோ அந்த போட்டோஸ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.