மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது நம்முடைய உடைமைகளைக் குறிப்பாக செல்ஃபோன், வால்ட், ஆகியவற்றைக் காக்க நாம் சிலவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். குடை, கொசு விரட்டிகள், சிறுசிறு ஜிப் லாக் பேக், தண்ணீர் உட்புகாத பேக் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
பயண்ம மேற்கொள்வதற்கு உதவும் வாண்டர்ட்ரெய்ல்ஸ் எனும் இணையத்தளத்தின் இணை நிறுவனர் நாராயண மேனன், மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைக் கூறுகிறார்.
1. குடை, மழை கோர்ட், வாட்டர் ப்ரூஃப் பேக் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
2. சிறு சிறு ஜிப்-லாக் பேக் கொண்டு செல்ல வேண்டும். அதில், வாலட், கேமரா, லென்ஸ், செல்ஃபோன், இன்னபிற விலையுயர்ந்த பொருட்களை அதில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம்.
3. மழைக்காலத்தில் கொசுக்களின் தாக்குதலால் பலவகை காய்ச்சல்கள் ஏற்படும். அதனால், கொசு விரட்ட பயன்படும் க்ரீம், கொசு வலை ஆகியவற்றை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
4. குடிநீரை தேவையான அளவு நீங்களே எடுத்துச் செல்வது நல்லது. இல்லையென்றால், சுடு தண்ணீரை வெளியில் வாங்கி அருந்துங்கள். அதேபோல், தெருவோரக் கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களை சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த உணவுப்பொருட்கள் மூடியிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. எளிதில் காய்ந்துவிடக்கூடிய மெல்லிய ஆடைகளையே எடுத்துச் செல்லுங்கள்.
6. காலணியாக மழைக்காலத்தில் அணியும் ஃப்ளோட்டர்ஸ் மற்றும் சாண்டல்ஸ் ஆகியவற்றை அணிவதே நல்லது.
ixigo எனப்படும் பயண இணையத்தளத்தின் முதன்மை செயல் நிறுவனர் அலோக் வாஜ்பாய் சொல்லும் அறிவுரைகள் இவை:
7. தெருவோர உணவுகளை பயணத்தின்போது சாப்பிடுவது நல்லதல்ல. மூலிகை டீ சாச்செட், அடைக்கப்பட்ட உணவுகளை கொண்டு செல்லலாம். அதேபோல், குடிநீர் திறந்திருக்கும் குழாய்களில் குடிக்கக் கூடாது.
8. மழைக்காலத்தில் சளி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், உங்களுடன் அடிப்படை மருந்துகளைக் கொண்ட முதலுதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது நலம்.
9. ஃப்ளாஷ் லைட் எடுத்துச் செல்லுங்கள், செல்ஃபோனில் டார்ச் லைட்டை பயன்படுத்துவதை தவிர்த்தால் செல்ஃபோன் சார்ஜை மிச்சப்படுத்தலாம்.
10. மழைக்காலங்களில், செல்ஃபோன் உள்ளிட்ட மின்சாதனங்களில் சார்ஜ் விரைவிலேயே இறங்கிவிடும் என்பதால் பவர் பேங்கை உடன் வைத்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.