scorecardresearch

இது தான் என் அம்மா வீடு… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ஹோம் டூர் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல்ல ஆரம்பிக்கும் போது என்னோட சீன் எல்லாம் அந்த வீட்டுலதான் எடுத்தாங்க. அந்த வீடு எப்படி இருக்குன்னு இந்த வீடியோவுல பாக்க போறீங்க!

Hema Rajkumar
Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

ஹேமா Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

இன்னைக்கு என்னோட அம்மா வீட்டுலதான் ஷூட்டிங் நடக்குது. நீங்க ஏற்கெனவே சீரியல்ல அம்மாவோட வீடு பாத்துருக்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குன்றக்குடில நடக்கிற கதை. காரைக்குடில எல்லாம் பெரிய தூண் வச்சுதான் வீடு கட்டுவாங்க.

சென்னையில காரைக்குடி வீடு தேடும் போது ஒருசில ஷூட்டிங் ஸ்பாட் தான் இருக்குது. ஆனா இன்னைக்கு நம்ம போற வீடு ரொம்ப தூரத்துல மகாபலிபுரத்துல இருக்கு. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல்ல ஆரம்பிக்கும் போது என்னோட சீன் எல்லாம் அந்த வீட்டுலதான் எடுத்தாங்க. அந்த வீடு எப்படி இருக்குன்னு இந்த வீடியோவுல பாக்க போறீங்க என்று அந்த வீட்டுக்கு போகிறார் ஹேமா.

வீட்டு வாசலில் இருக்கும் யானை சிலை

இந்த வீட்டுக்கு நான் மூனு, நாலு வருஷத்துக்கு முன்னாடி வந்தேன். அப்புறம் இப்போதான் வர்றேன். சீரியல்ல எனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு, நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு போயிடுவேன். நான் கன்சீவ் ஆன பிறகு அம்மா வீடு சீன் வந்தது. ஒரு 4 மாசம் அம்மா வீட்டுல ஷூட் போச்சு. டிராவல் மட்டும் 5 மணி நேரம் ஆகும். அப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு கம்பெனியில இருந்து தனியா கார் கொடுத்துட்டாங்க.

வீட்டுக்குள் பூஜை அறையுடன் இருக்கும் சின்ன முற்றம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அம்மாவுடன் ஹேமா

உள்ளே நுழைந்ததும் பெரிய கதவுகளுடன் வாசல், யானை சிலை இருக்கு. முன்னாடி ஒரு சின்ன திண்ணை இருக்கு. இந்த வீடு முழுக்கவே நிறைய ஆர்ட் வொர்க் பண்ணிருப்பாங்க.

வீட்டிலிருந்து மேல் தோற்றம்

வீட்டுக்குள் நுழைந்ததும் பெரிய பெரிய தூண்களுடன் ஹால், நிறைய பெயிண்டிங்ஸ் இருக்கும். இன்னும் உள்ளே போனா ஒரு குட்டி முற்றம் இருக்கும். இந்த இடத்துல நிறைய சீன் எடுத்துருப்பாங்க. பக்கத்துலேயே பூஜை ரூம், டைனிங் ஹால், கிச்சன், வாஷ்ரூம் எல்லாமே இருக்கு. இதெல்லாம் கிரவுண்ட் ஃபுளோர். இதுக்கு மேல ஒரு போர்ஷன் இருக்கு.

இந்த இடத்துலதான் மீனா ஜீவாவ வம்பிழுத்து கிஸ் பண்ணுவா
வீடு முழுக்க நிறைய பெயிண்டிங்ஸ் இருக்கும்

இதுதான் வீட்டோட முதல் ஃபுளோர். முதல் முதல்ல ஜீவா மீனா வீட்டுக்கு வரும் போது, இந்த இடத்துலதான் மீனா ஜீவாவ வம்பிக்குழுத்து கிஸ் பண்ணுவா. இங்க ஒரு ஹாஃப்ல மட்டும் 3 ரூம் இருக்கு. இன்னொரு போர்ஷன்ல ஒரு பெரிய ஹால் இருக்கு என இப்படி பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pandian stores hema rajkumar youtube channel pandian stores meena

Best of Express