scorecardresearch

காதுவரை காரம், பேசமுடியாத நிலை – ஸ்பைசி நூடுல் சேலஞ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா!

Pandian Stores Hema Spicy Noodles Challenge Viral Video Tamil News பிறகு ஏமாற்றக்கூடாது என்றுகூறி முழு சாஸ் பாக்கெட்டையும் சேர்த்துக் கிளறிவிட்டு, இறுதியாக எள்ளு மற்றும் கடற்பாசி ஃபிளேக்ஸ் சேர்த்தால் நூடுல்ஸ் ரெடி.

Pandian Stores Hema Spicy Noodles Challenge Viral Video Tamil News
Pandian Stores Hema Spicy Noodles Challenge Viral Video Tamil News

Pandian Stores Hema Spicy Noodles Challenge Viral Video Tamil News : அவ்வப்போது அவ்வளவு எளிதில் யாராலும் செய்துவிட முடியாத ஏதாவதொரு சேலஞ் இன்டர்நெட்டில் வைரலாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஸ்பைஸி நூடுல்ஸ் சவாலை முயற்சி செய்து, தன் யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா. மிகவும் காரமாக இருக்கும் நூடுல்ஸை சில வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளோடு முழுமையாக ஒருவரால் சாப்பிட முடியுமா என்பதுதான் இந்த சவால். இதனை ஹேமா எந்த அளவிற்கு வெற்றிகரமாக செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்…

“ஏற்கெனவே இந்த சவாலை செய்தவர்கள், இதை முழுமையாக சாப்பிட முடியாது. நாக்கு எரியும், கண்கள் கலங்குவது நிறுத்தாது, இதையெல்லாம் சாப்பிடவே கூடாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அதுவே, என்னை இந்த சவாலை செய்யவேண்டும் என்று தூண்டியது. இந்த இரட்டிப்பு காரம் கொண்ட நூடுல்ஸை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினேன். முதலில் இதை எப்படி சமைக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்” என்றபடி நூடுல்ஸ் செய்ய நம்மை கிச்சனுக்கு அழைத்துச் சென்றார்.

“இந்த நூடுல்ஸ் பேக்கெட்டில் நூடுல்ஸ், மிளகாய் சாஸ் மற்றும் ஃபிளேக்ஸ் ஆகியவை உள்ளன. முதலி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் நூடுல்ஸ் போட்டு வேகவிடவேண்டும். பிறகு, சிறிதளவு மட்டும் தண்ணீர் வைத்துக்கொண்டு, அதிகப்படியான தண்ணீரைக் கொட்டிவிடுங்கள். அடுத்ததாக, கொடுக்கப்பட்டிருக்கும் சாஸ் சேர்த்து நூடுல்ஸை நன்கு கலந்துவிடவேண்டும்” பார்க்கவே பயமாக இருக்கிறது என்று முதலில் பாதி சாஸ் மட்டுமே  சேர்த்தார். பிறகு ஏமாற்றக்கூடாது என்றுகூறி முழு சாஸ் பாக்கெட்டையும் சேர்த்துக் கிளறிவிட்டு, இறுதியாக எள்ளு மற்றும் கடற்பாசி ஃபிளேக்ஸ் சேர்த்தால் நூடுல்ஸ் ரெடி.

“அதிகப்படியான காரம் இருந்தால், அதனை சரிசெய்ய மில்க்ஷேக் மற்றும் பாதுஷா வைத்திருக்கிறேன். இது அதிகப்படியான காரத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்திருக்கிறேன். முயற்சி செய்யக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. என்றாலும், வேறு வழி இல்லை. முயற்சி செய்வோம்” என்றபடி மில்க்ஷேக், இனிப்புகளை ரெடியாக பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

ஒரு பீதியிலேயே முதல் ஸ்பூன் நூடுல்ஸை சாப்பிட்டார். சாப்பிட்டதுமே கண்கள் கலங்கியபடி, “செம்ம காரம். வாய், உதடு  ஆரபித்துவிட்டது. ஆனால், அதன் சுவை உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது” என்றபடி மேலும் சாப்பிடுவதைத் தொடர்ந்தார் ஹேமா. காது வரை எரிச்சல், தலை சுற்றுவது எனக் காரத்தின் பின்வைளைவுகளை அனுபவித்துக்கொண்டும் அதனைத் தணிக்க அவ்வப்போது மில்க்ஷேக், இனிப்புகளை உட்கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டு இந்த சவாலை செய்துகொண்டிருந்தார்.

எப்படியோ ஒருவழியாகக் கஷ்டப்பட்டு இந்த காரமான நூடுல்ஸை சாப்பிட்டு முடித்தார் ஹேமா. மேலும், மில்க்ஷேக் மற்றும் பாதுஷா இருந்ததால்தான் இந்த அளவிற்கு இவரால் சாப்பிட முடிந்தது என்றும் இல்லையென்றால் நிச்சயம் இதனை முடித்திருக்க முடியாதென்றும் பேச முடியாத நிலையிலும் கூறினார். இனிமேல் இதெல்லாம் முயற்சி செய்யவே முடியாது என்று கூறி காணொளியை நிறைவு செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pandian stores hema spicy noodles challenge viral video tamil news