விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
Advertisment
ஹேமா Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஷூட்டிங் சாப்பாடு வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
இன்னைக்கு வீடியோல பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோடக்ஷன் சாப்பாடு எப்படி இருக்குனு தான் பாக்க போறோம். இன்னைக்கு எல்லா ஆர்டிஸ்ட்டும் வருவாங்க. ஒரு ஃபங்ஷன் சீன் எடுக்க போறதா சொன்னாங்க.
எப்போவுமே புரோடக்ஷன் சாப்பாடுன்னா இட்லி, பொங்கல் இருக்கும். இன்னைக்கு இட்லி, பொங்கல், கல் தோசை, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கொடுத்துருக்காங்கனு சாப்பிட்டு விட்டு மேக்கப் செய்ய ரெடி ஆனார் ஹேமா.
எப்பவுமே நம்ம மேக்கப் போட்டு ஹேர் ஸ்டைல் பண்ணும் போது இன்னைக்கு என்ன டிரெஸ் போட போறோம் யோசிக்கணும். ஒருவேளை புடவை கட்டுனா, புடவை கட்டுன பிறகுதான் ஹேர் ஸ்டைல் பண்ணனும். எப்பவுமே மீனா கேரெக்டருக்கு வலது பக்கம் உச்சிதான் எடுப்போம். ஆனா, இது ஃபங்ஷன் லுக், அதனால நடுவுல உச்சி எடுத்து ஹேர் ஸ்டைல் பண்றோம். நடுவுல வகுடு எடுத்தா பார்க்க கொஞ்சம் வயசான மாதிரி தெரியும், அதுனால நான் அப்படி எடுக்க மாட்டேன். சைட் வகுடு எடுத்தா கொஞ்சம் யங் லுக் கிடைக்கும்.
எஜமான் மாதிரி பழைய படங்கள்ள நடிகை மீனா ஹேர்ஸ்டைல் நல்லா இருக்கும். அதுக்கு முன்னாடி உள்ள படங்கள்ல பானுபிரியா ஹேர்ஸ்டைல் நல்ல இருக்கும்.
புரோடக்ஷன் சாப்பாடுல தினமும் ஏதாவது நான் வெஜ் இருக்கும். இன்னைக்கு கத்தரிக்காய் சாம்பார், புளிசாதம், கோஸ் கூட்டு, பீன்ஸ் பொரியல், தயிர், ரசம், முட்டை, சிக்கம் இருக்கு. இதுதான் இன்னைக்கு மெனு என்று ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“