Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவை பாராட்டிய 80'ஸ் நடிகை ராதா: விரைவில் சந்திக்கப் போறாங்களாம்!

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Meena

Hema Rajkumar

சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா மீதுதான் இருக்கிறது.

Advertisment

மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.  பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றினார்.

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், ஒருகட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என வதந்திகள் பரவியது. அப்போது ஹேமா கர்ப்பமாக இருந்தார் சீரியலில் மட்டுமல்ல, நிஜமாகவே; ஆனால் குழந்தை பிரசவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, ஹேமா சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். இப்போது ஹேமாவுடன் சேர்ந்து அவரது ஆண் குழந்தை சாத்வீக்கும் கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறான். இதுவே இந்த சீரியலுக்கு பெரிய ஆத்மபலத்தை கொடுக்கிறது.

ஹேமா, Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த  வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் ஹேமா பேசுகையில்; நம்ம இப்போ லொகேஷன் வந்தாச்சு. ஏ.ஆர்.எஸ் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ங்கிறதால இங்க நிறைய ஷூட்டிங் நடக்கும். இதுக்கு முன்னாடி நம்ம போட்ட ஏ.ஆர்.எஸ் வீடியோ பாத்துட்டு, அதோட ஓனர் இங்க மேனஜர் கிட்ட சொல்லிருக்காங்க. அந்த ஓனர் வேற யாரும் இல்ல. நடிகை ராதா தான்.  நான் அவங்களை பாத்தது இல்ல, ஆனா அவங்க நம்ம சேனல்ல பாத்துட்டு இங்க இருக்கிற மேனஜர் கிட்ட சொல்லிருக்காங்க, அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. கூடிய சீக்கிரம் அவங்களை சந்திக்கணும் என்று சொல்லி அங்கே இருக்கும் சின்ன சின்ன வீடு, கோயில், குற்றவியல் நீதிமன்றம்னு எல்லா செட்டப்பும் இருக்குது அங்குள்ள இடங்களை ஹேமா அந்த வீடியோவில் காட்டுகிறார்.

இதோ அந்த வீடியோ!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment