விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
ஹேமா, Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஒரு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடிகர்கள் மட்டுமல்ல, அந்த சீரியலில் வரும் வீடு கூட ரசிகர்களுக்கு பிடிக்கும். பெரிய தூண்கள், திண்ணையுடன் கூடிய வாசல், வீட்டுக்கு நடுவில் முற்றம், வெளியே தோட்டம் என பார்ப்பதற்கு அந்தகால பராம்பரிய வீட்டை போல இருக்கும்.
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், இதுவரை தாங்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, வேறொரு வீட்டில் குடியேறி உள்ளனர். அந்த பழைய வீட்டில் உள்ள நினைவுகளைத் தான் ஹேமா அந்த யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் ஹேமா பேசுகையில், நீங்க எல்லாருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு பாத்துருப்பீங்க.. 4 வருஷமா நாங்க வாழ்ந்த வீட்டுல இருந்து எங்களை துரத்தி விட்டுருவாங்க. அந்த எபிசோட் எடுக்கப்போறதா ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னாங்க.
இதுக்கு அப்புறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு கிடையாதுனு சொன்ன உடனே எனக்கு ரொம்ப எமோஷனலா ஆயிடுச்சு. ஒரு விஷயம் நம்மகிட்ட இருந்து திடீர்னு போகும்போது அய்யயோ தோணும்ல.. எனக்கு இப்போ அப்படித்தான் இருக்குது.
இந்த இடம் எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே ரொம்ப வசதியா இருந்தது. இதைவிட்டு வேற ஒரு லொக்கேஷன் போறது கஷ்டமா இருந்தது. இந்த 4 வருஷம் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இந்த வீட்டோட சேர்ந்து நிறைய நியாபகங்கள் இருக்குது. இதெல்லாம் இந்த வீடியோவுல நான் உங்கக் கூட பகிர்ந்துக்க போறேன்.
கிட்டத்தட்ட 4 வருஷமா எங்கக் கூட சேர்ந்து இந்த வீடும் நடிச்சுட்டு இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகுறது, கண்ணன் வீட்ட விட்டு ஓடிப்போறது, என் மாமியார் இறந்து போறதுனு எல்லாத்தையும் சேர்த்து நிறைய நியாபகங்களை இந்த இடம் தாங்கிட்டு இருக்கு. நான் கர்ப்பமா இருக்கும்போது, கடையில போயி ஷூட் எடுக்க முடியலன்னு வீட்டு வாசல்ல கடை போடுற மாதிரி நிறைய சீன்ஸ் இங்க எடுத்தாங்க.
அப்படியே வீட்டுக்குள்ள போனா நமக்கு ரொம்ப பிடிச்ச ஹால் இருக்கு. இங்க நிறைய சீன்ஸ் பண்ணிருக்கோம். நிறைய மெமரிஸ் இருக்கு இந்த இடத்துல, அழுகை, காமெடி, ஜாலி, ரொமன்ஸ், சண்டைனு நிறைய சீன்ஸ் இங்க நடந்துருக்கு. முத்தம் இருக்கிற இடத்துல தான் சாப்பிடுற சீன்ஸ் எடுப்பாங்க.. எனக்கு ஸ்பெஷலா சொல்லனும்னா நான் கர்ப்பமா இருக்கும்போது இந்த இடத்துல நிறைய நடந்துருக்கேன்,
இந்த வீட்டுல இருக்கும்போதுதான் சித்து நம்மளை விட்டு போனா. இப்படி வீட்டுக்கு உள்ளே, வெளியே, கார் பார்க்கிங் ஏரியா என ஓவ்வொரு இடத்தில் இருக்கும் நியாபகங்களையும் ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.