விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
ஹேமா Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல மார்ச் மாதத்துக்கான ஷெட்யூல் ஸ்டார்ட் ஆயிடுச்சு. சில உடல்நல காரணங்களால நான் முதல் நாளு நாள் ஷூட் போகல. எல்லா சீன்லயும் நான் இருக்கிறதால எனக்கு லீவு கிடைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டம். அதுவும் இப்போ ரொம்ப வேகமா போறதால கண்டிப்பா நமக்கு லீவு கிடைக்காது.
இன்னையில இருந்து எனக்கு நிறைய வேலை இருக்கும். இதுக்கு நடுவுல நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்ல என்னென்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்குதுனு நான் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்க போறேன் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகிறார் ஹேமா.
நான் லொக்கேஷனுக்கு வந்துட்டேன். இப்போதான் யூனிட் வண்டியில இருந்து எல்லாம் இறக்கிட்டு இருக்காங்க. இதுல இருக்கிறது எல்லாமே நம்ம ஷூட்டிங்கு யூஸ் பண்ற திங்க்ஸ், இது எல்லாமே அவ்வளவு கனமா இருக்கும். அதை எல்லாம் தூக்கிட்டு போவாங்க.
நாங்க உழைக்கிறதெல்லாம் டி.வி.யில தெரியும். ஆனா எங்களுக்கு பின்னாடி நிறைய பேரு உழைச்சிட்டு இருக்காங்க, அது யாருக்கும் தெரியாது.
இதுதான் நமக்கான கேரவன். ஒருசில கேரவன்ல 3 பார்ட் இருக்கும். இந்த கேரவன்ல 2 பார்ட் இருக்குது.
இன்னைக்கு மெனுல இட்லி, தோசை, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, உப்புமா இருக்கு. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பமான புதுசுல காலையில 7.30 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர சொல்லுவாங்க. நான் கரெக்டா வந்துருவேன். ஆனா இங்க யாருமே இருக்கமாட்டாங்க. சாத்விக் பிறந்த பிறகு தூக்கம் பத்தல. அதனால லொக்கேஷன் வர்ற கொஞ்சம் லேட் ஆகும். ஆனா இப்போ எல்லாம் சீக்கிரம் வந்துருவேன். அப்போதான் பொறுமையா ரெடி ஆக முடியும். சீரியல்ல நிறைய லேடிஸ் ஆர்டிஸ்ட் இருப்பாங்க. ஆனா ஒரே ஒரு ஹேர் டிரெஸ்ஸர் தான் இருப்பாங்க. நிறைய போட்டி போட வேண்டியிருக்கும். அதனால நம்ம சீக்கிரம் வந்துட்டா சீக்கிரம் ரெடி ஆயிடலாம்.
மீனா ரெடி ஆயிட்டா. நம்ம ரெடி ஆன அப்புறம் கவனிக்க வேண்டிய விஷயம் கண்டினியூட்டி. தோடு, வளையல், பொட்டு, குங்குமம், செயின் எல்லாம் கரெக்டா போட்டுருக்கோமானு ஒரு தடவை நல்ல கவனிக்கனும். இல்லன்னா அசிஸ்டெண்ட் டிரைக்டர் கண்டினியூட்டி மிஸ் ஆகுதுன்னு சொல்லுவாங்க இப்படி பல விஷயங்களை ஹேமா ராஜ்குமார் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.