பவித்ரா ஜனனி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார். விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்போது இந்த சீரியல் அதே கதாபாத்திரங்களுடன், ஆனால் புது கதைக் களத்துடன் முற்றிலும் புதிய கோணத்தில் ஓளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் அபியாக நடிக்கும் பவித்ராவுக்கு கடந்த ஜனவரி மாதம் பிறந்தநாள் வந்தது. இதனை முன்னிட்டு இந்த சீரியலில், அவருக்கு அண்ணியாக நடிக்கும், ஷியாமந்தா கிரண், பவித்ராவுக்கு மிகவும் பிடித்த விஜய் சேதுபதியை நேரில் வரவழைத்து அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுத்த வீடியோவை பவித்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி, சினிமாவை அறிந்த காலத்திலிருந்தே பயணித்த உணர்வு!! நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு மிகவும் நேசித்த ஒரு நபர், இந்தச் சந்திப்பிற்குப் பிறகு மரியாதை மேலும் கூடிவிட்டது!
ஒரு பெரிய ஆளுமை எப்படி இவ்வளவு அன்பாக, எளிமையானவராக இருக்கிறார்..? அவருடனான அர்த்தமுள்ள உரையாடல்கள் என் இதயத்தில் பதிந்திருக்கும்❤️
என்றென்றும் நேசிக்கும் ஒரு பிரி பர்த்டே சர்ப்ரைஸ்!! இதுதான் மிகச் சிறந்ததாக இருக்கும்… முழுக்க முழுக்க ஃபேன் கேர்ள் தருணம் 💜
இந்த தருணத்தை உருவாக்கியதற்கு சம்யுக்தா கிரன் மற்றும் இதை செய்ததற்காக ரியோ ராஜ் அவர்களுக்கு நன்றி!! என்று பவித்ரா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி ரசிகர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக தொகுப்பாளினி அர்ச்சனா தங்கை ஆன அனிதாவின் பிறந்தநாளுக்கு கூட விஜய் சேதுபதி நேரில் சென்று பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“