பவித்ரா ஜனனி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில்’ நடிக்கிறார். சமீபத்தில் பவித்ரா தன் நண்பர்களுடன் சேர்ந்து சதுரகிரிக்கு சென்று சாமி தரிசனம் செய்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”திட்டமிடாத திடீர் பயணம்,
சென்னை – மதுரை – தனியார் பேருந்து (இரவு 12 மணி)
மதுரை பேருந்து நிறுத்தம்- கிருஷ்ணன் கோவில் – டவுன்பஸ்
கிருஷ்ணன் கோவில் – சேதுநாரணாயபுரம் வரை – டிப்பர் லாரி
சேதுநாராயணபுரம் – சதுரகிரி வரை – ஷேர்ஆட்டோ
மறக்க முடியாத ஆன்மிக பயணம்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
சதுரகிரி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். இந்த கோயிலுக்கு தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து, காட்டாறுகள், ஓடைகள், மலைகள் ஆகியவற்றைக் கடந்து கரடு முரடான மலைப்பாதையில் 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
இங்கு மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
18 சித்தர்களும் இந்த மலைப்பகுதியில் வாசம் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை சித்தர்களுக்கு இங்கு விசேஷ பூஜையும் நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வா்.
மலையேறிச் சென்று சந்தன மகாலிங்கத்தையும், சுந்தர மகாலிங்கத்தையும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“