விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், சீசன் 1இல் மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.
இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதில், அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக வினோத் நடிப்பு இருக்கிறது. பவித்ராவும் அதே போலத்தான்..
குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். அத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில், இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனிக்கு, சிறந்த பெர்மாருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா, பவித்ராவுக்கு போன் செய்து பாராட்டியதை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், என் சந்தோஷத்தை வார்த்தைகளாக மொழிபெயர்க்க எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.
ஒரு நீண்ட சோர்வான நாளில் புதிய காற்றின் உற்சாகத்தை போல, அனுஷ்காவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, இது சர்ரியல், ஒரு பிரெங்க் பகல் கனவு போல இருந்தது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு இது பாராட்டு அழைப்பு
அவர் முயற்சி செய்து எங்களைப் பாராட்டினாள், அவர் மீதான மரியாதை எல்லையைத் தாண்டி வளர்ந்தது. அவர் எங்கள் தொடரை தொடர்ந்து பார்ப்பவர் என்றும் குறிப்பிட்டார், அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டுகள் என் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
இதை எழுதும் போது கூட நான் இன்னும் மேகத்தில் பறக்கிறேன். ஒரு சோர்வான நாளில் நான் உங்கள் அழைப்பை நினைத்துப் பார்க்கிறேன், என் சோம்பல் அனைத்தும் மந்திரம் போல பறந்து செல்கிறது என்று பவித்ரா அதில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“