அமீரும், பாவனியும் காதலித்து வருகின்றனர். பல இடங்களுக்கு ஜோடியாக செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆனதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சில விளம்பர படங்களிலும் ஒன்றாக நடித்தனர்.
இப்போது பாவனி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த பாவனி அதில், ‘என் வாழ்க்கையின் இந்த 15 நாட்களைக் கடப்பது மிகவும் கடினமாக இருந்தது. இது கழுத்தில் சிறிய வலியுடன் தொடங்கியது. மேலும் வலி நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது.
நான் பல எலும்பியல் நிபுணர்களிடம் ஆலோசித்தேன், என் பிசியோதெரபியை ஆரம்பித்தேன், ஆனால் வலி தாங்க முடியாத அளவுக்கு போனது. வலி தாங்காமல் அழ ஆரம்பித்தேன், பல தூக்கமில்லாத இரவுகளை கழித்தேன், இடையில் எனக்கு படப்பிடிப்பு கூட இருந்தது.
ஆனால், நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பிரேக் எடுக்க எனக்கு ஆப்ஷன் இல்லை. அதனால் இந்த வலியுடன் வேலையைத் தேர்ந்தெடுத்து, ஹைதராபாத் பறந்தேன். எனது படப்பிடிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர், என்னை வீட்டில் இருப்பது போல உணர வைத்தனர். அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன்.
நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி இன்னும் மோசமாகிவிட்டது, என்னால் என் வலது கையை தூக்க முடியவில்லை, அது உடைந்தது போல் உணர்ந்தேன். அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு ஒரு பெரிய சுமையாக இருந்தது.
வலியால் கத்தினேன். இறுதியாக இந்த (எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி) அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது வலியில்லாமல் மிகவும் நன்றாக உணர்கிறேன், மருத்துவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
இந்தச் சம்பவத்தில் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும், எனது நண்பர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த வலியில் உடன் இருந்ததற்கு நன்றி அமீர்.. உன் தூக்கத்தையும் உன் வேலையையும் நான் கெடுத்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். வலியில் இருக்கும் போது நான் சின்னக் குழந்தையாக மாறுவேன் என்று எனக்குத் தெரியும்’ இப்படி பாவனி உணர்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நக்ஷ்த்திரா நாகேஷ், ரம்யா பாண்டியன், விஜே பிரியங்கா, சோனியா அகர்வால் உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் பாவனி விரைவில் குணமடைய வாழ்த்தினர்.
மேலும் அமீர், நாளைக்கு அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூரில் டான்ஸ் பிராக்டிஸ் இருக்கு. கார் பார்க்ல வெயிட் பண்றேன், சீக்கிரம் வா என கலாய்த்து கமென்டில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“