பயணம் என்பது எப்போதும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அதிலும், மழைக்காலத்தில் பயணம் என்றால் கேட்கவா வேண்டும். கூடுதல் இன்பம். காரை எடுத்துக்கொண்டு தேவையானவற்றை அதில் அள்ளிப் போட்டுக்கொண்டு, தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பயணங்களின் மூலமே சாத்தியம். வெளிநாட்டுக்குத் தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்தியாவிலேயே சாலை மார்க்கமாக நாம் சுற்றிப்பார்க்கக் கூடிய ஏராளமான இடங்கள் உண்டு. அவற்றில் ஐந்து சிறந்த இடங்களை காண்போம்.
1.மும்பை - புனே நெடுஞ்சாலை:
/tamil-ie/media/media_files/uploads/2017/07/expressway1-300x167.png)
மும்பையின் லோனாவாலா மழைக்காலத்தை ரசிக்க ஏற்ற இடம். 93 கிலோமீட்டர் நீளம் உடைய மும்பை - புனே நெடுஞ்சாலை, தானே காரை ஓட்டிக்கொண்டு தனித்து பயணம் மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்டது போல் இருக்கும். பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் இந்த இடம் பயணத்தின் மொத்த நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். லோனாவாலா ‘சிக்கி’ எனப்படும் கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்றது. அதை சாப்பிட்டுக்கொண்டே அதன் அழகை ரசிப்பது அலாதி சுகம்.
2. சிம்லா - மனாலி:
/tamil-ie/media/media_files/uploads/2017/07/b-manali-road-300x199.jpg)
சிம்லா - மணாலி எப்போதுமே அதிகம் விரும்பப்படும் மலைப்பிரதேசம். ஆனால், மாண்டி வழியாக சாலை மார்க்கமாக சிம்லா - மனாலி சென்றால் அதன் அழகை முழுமையாக பெற முடியும். கார் ஓட்ட விரும்புபவர்களுக்கு ஏற்ற சாலைப் பயணமாக இது அமையும். 259 கிலோமீட்டர் தூரம் வரை மலைகள், ஆற்றுப்படுகைகள் இடையே பயணப்படுவது கசக்கவா செய்யும். திரும்ப திரும்ப உங்களை செல்லத் தூண்டும் சிம்லா - மனாலி.
3. டெல்லி - நைனிடால் - பங்கோட்:
/tamil-ie/media/media_files/uploads/2017/07/pangot_storysize_650_071714040816-300x188.jpg)
டெல்லியின் அதிக வெப்பநிலையை தாக்குப்பிடிக்க பங்கோட்டுக்கு தான் மக்கள் அதிகம் செல்வார்கள். டெல்லியிலிருந்து 293 கிலோமீட்டர், நைனிடாலாண்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்கோட், மலைப்பிரதேசத்திற்கு முதல்முறையாக பயணப்படுபவர்களுக்கு ஏற்ற இடம். சீனா பீக் எனப்படும் உயரமான மலைமுகடு, கில்பரி பறவைகள் சரணாலயம் ஆகியவை அங்கு நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
4. சென்னை - பாண்டிச்சேரி:
/tamil-ie/media/media_files/uploads/2017/07/Chennai-Pondicherry-300x169.jpg)
சென்னை - பாண்டிச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை நம் மனதைக் கொள்ளை கொள்ளும். கடற்கரை விரும்பிகளுக்கு ஏற்ற பயணமாக இது இருக்கும். யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மகாபலிபுரத்தை சென்னை - பாண்டிச்சேரி பயணத்தின்போது பார்க்க மறந்துவிடாதீர்கள்.
5. பெங்களூரு - கூர்க் - சிக்மகளூர்:
/tamil-ie/media/media_files/uploads/2017/07/Raja-Seat-Coorg-300x150.jpg)
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என அறியப்படும் கூர்க் சாலை மார்க்க பயணத்திற்கான சிறந்த இடம். விதானா சௌதா, பெங்களூரு அரண்மனை, விகாச சௌதா, மாருதி மந்திர், பனாஸ்வாடி அனுமான் கோவில் உள்ளிட்டவை அங்கு நாம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.