scorecardresearch

பி.எப் பேலன்சை எளிதாக தெரிந்துகொள்ள வேண்டுமா?. ஒரு மிஸ்டு கால் போதும்

நெருக்கடி காலத்தில், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி நிலையை தெரிந்துக் கொள்ள மிக ஆவலுடன் உள்ளனர்

pf fund,how to check pf fund balance,pf fund via sms,pf fund via missed call,pf fund checking during lockdown,epfo, epfo news, epfo news in tamil, epfo latest news, epfo latest news in tamil
pf fund,how to check pf fund balance,pf fund via sms,pf fund via missed call,pf fund checking during lockdown,epfo, epfo news, epfo news in tamil, epfo latest news, epfo latest news in tamil

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. இந்த மாதிரியான நெருக்கடி காலத்தில், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி நிலையை தெரிந்துக் கொள்ள மிக ஆவலுடன் உள்ளனர். நல்வாய்ப்பாக வருங்கால வைப்பு நிதி நிறுவன அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இருப்பை (balance) குறுஞ்செய்தி அல்லது மிஸ்ட் கால் வாயிலாக சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குறுஞ்செய்தி (SMS) மூலமாக:

உங்களுடைய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) Universal Account Number (UAN) உடன் 7738299899 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். அந்த குறுஞ்செய்தி ’EPFOHO உங்களுடைய UAN ENG’ (EPFOHO Your UAN ENG) என்ற வடிவத்தில் இருக்க வேண்டும். ENG என்பது ஆங்கிலத்திற்கான முதல் மூன்று எழுத்துக்கள். இந்த சேவையை ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடா, தெலுகு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய 9 இதர மொழிகளிலும் பெறலாம். உங்களுக்கு விருப்பமான மொழியில் குறுஞ்செய்தியைப் பெற அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை ENG என்பதற்கு பதிலாக உள்ளீடு செய்யவும்.

எடுத்துக்காட்டாக ஹிந்திக்கு EPFOHO உங்களுடைய UAN HIN என்றும் பெங்காலிக்கு EPFOHO உங்களுடைய UAN BEN என்றும் தட்டச்சு செய்யவும்.
உங்களுடைய UAN’ ஐ உங்களுடைய வங்கி கணக்கு, பான் (PAN) மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்க உங்களுடைய முதலாளியிடம் உங்களுக்காக இதை செய்ய சொல்லுங்கள். EPFO அதில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே தகவல்களை அனுப்புகிறது.

மிஸ்ட் கால் (missed call) வழியாக:

எளிமையாக மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமும் உங்களுடைய இருப்பை தெரிந்துக் கொள்ளும் வசதியை EPFO வழங்குகிறது. 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
திரும்பவும், உங்களுடைய வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் (PAN) ஆகியவை உங்களுடைய UAN உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

தொழிலாளர்கள் Umang app ஆப்பை App Store மற்றும் Google Play ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும் EPFO இணையதள முகவரியான http://www.epfindia.gov.in என்பதற்கு சென்று, Our Services – Member Passbook என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய UAN மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உழ்நுழைந்து உங்களுடைய வருங்கால வைப்பு நிதி விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pf fundhow to check pf fund balancepf fund via smspf fund via missed call