உனக்கு 27.. எனக்கு 52 .. இணையத்தில் பரவும் பிரபல நடிகரின் திருமணம்!!!

எனக்கு மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களின் காதல் பற்றி எதுவும் தெரியாது

பிரபல பாலிவுட் நடிகர்  மிலிந்த் சோமன் , மகள் வயது பெண்ணுடன் திருமணம் செய்துக்  கொண்டுள்ளது  இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் மிலிந்த் சோமன் பாலிவுட்டில் மட்டுமில்லை  தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அலெக்ஸ் பாண்டியன், பையா,  பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாம சோமனுக்கு நீச்சல், மாடலிங் என பன்முகம் உண்டு.

சமீபத்தில், இவர் மகள் வயது பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும்  தகவல் வெளியாகியது.  இதற்குப் சோமன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் நேற்றைய தினம், (22.4.18)  சோமன்,  அங்கிதா மெஹெந்தி என்ற 27 வயது பெண்ணை மும்பையில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார்.

மராத்தி, அஸ்சாம் முறைப்படி இவர்களின் திருமண சடங்குகள் நடந்தன. கூடிய விரைவில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. இதற்கு சோமன் மற்றும் அங்கிதா நெரு க்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

சோமன் ஏற்கனவே திருமணம் ஆனவர். பிரெஞ்ச் நடிகையான மைலேன் ஜம்பனோய் என்பவரை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், விரைவிலேயே அந்தக் காதல் கசந்துவிட, 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.  இந்நிலையில், தான் சோமன், அங்கிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

Mere YaarKi Shaadi Hai :)… . . . #shadi #wedding

A post shared by Abhishek Asha Mishra (@abhirunning) on

இதுக் குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த சோமன், “ மகள் வயது பெண்ணுடன் காதல், திருமணமா? என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களின் காதல் பற்றி எதுவும் தெரியாது. கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் காதலித்து வந்தோம். ஒருவரையொருவர் பேசி, பழகி, புரிந்துக் கொண்ட பின்பு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close