பயணங்களில் ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது இந்த 6 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

பயணத்தின்போது ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் இதோ.

பயணங்களின் போது மிகவும் நாம் மண்டையைக் குழப்பி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு விஷயம் ஹோட்டல். உணவு சுவையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும். நமது பட்ஜெட்டுக்கு துண்டு விழாத வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நமது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டால், தேர்ந்தெடுக்கும் ஹோட்டல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பது அவசியம். அதனால், பயணத்தின்போது ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் இதோ.

1. உணவகம் அமைந்திருக்கும் இடம்:

நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே அந்த ஹோட்டல் இருக்கிறதா என வரைபடத்தில் ஒருமுறை செக் செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பான இடத்தில் அமைந்திருக்கிறதா, சுற்றுலா மேற்கொள்ளும் இடத்திலிருந்து ஹோட்டல் அருகிலேயே அமைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. குடும்பத்திற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்:

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹோட்டல் முக்கியமான சில சிறப்பம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். பெரிய அறைகள், தனித்தனி கழிவறைகள், துணிகளை சலவை செய்வதற்கான சேவை, தங்கும் அறையில் வை-ஃபை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்பதை அவசியம் ’புக்’ செய்வதற்கு முன்பு ஒருமுறை கவனித்துக் கொள்ளுங்கள்.

3. பல டைனிங் வசதிகள்:

காஃபி ஷாப், உணவு டைனிங், பல உணவு வகைகள் உள்ள உணவகங்களை தேர்ந்தெடுத்தால், உங்கள் பயணம் நீங்கள் சாப்பிடும் உணவுக்காகவும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.

4. அறையின் அளவு:

உங்கள் குடும்பம் முழுவதும் ஒரே அறையில் தங்க வேண்டும் என நீங்கள் பிளான் செய்தால், அதற்கேற்றாற்போல் உணவகத்தின் அறைகள் பெரிதாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக கட்டில் வசதி உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்காக சில வசதிகள்:

குழந்தைகளுக்காக தகுந்த பாதுகாவலர்களைக் கொண்ட தனி நீச்சல் குளம் இருந்தால் உங்கள் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

6. ஹோட்டல் குறித்து ஆய்வு செய்யுங்கள்:

நீங்கள் தேர்வு செய்யும் ஹோட்டலின் தரம் குறித்து மதிப்புரையை முன்பே தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

இவற்றையும் படியுங்கள்: பயணவிரும்பிகளா நீங்கள்: இந்த 5 ஆப் மூலம் பயணத்தை எளிதாக்குங்கள்

×Close
×Close