Advertisment

பிளாஸ்டிக் டப்பாவில் உணவை சேமிப்பது பாதுகாப்பானதா? மருத்துவர் என்ன சொல்கிறார்?

பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கு முன், அது உணவுக்கு பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க டாக்டர் ஜா பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Plastic Containers

Is it safe to store food in plastic containers

நம் அம்மாக்களையும், பிளாஸ்டிக் டப்பாக்களையும் பிரிக்கவே முடியாது. அதில் ஒன்றை நீங்கள் தொலைத்து விட்டால் அவ்வளவு தான், அம்மாவின் கோபத்திலிருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

Advertisment

ஆனால் இந்த பிளாஸ்டிக் டப்பாவில் சேமிக்கப்படும் உணவை உட்கொள்வது பாதுகாப்பானதா?

டாக்டர் பிரவீன் ஜா கருத்துப்படி, பிளாஸ்டிக் கன்டெய்னரில் உணவை சேமிப்பதன் பாதுகாப்பு, பிளாஸ்டிக் வகை மற்றும் அதன் நோக்கத்தைப் பொறுத்தது.

சில பிளாஸ்டிக்குகள் உணவுடன் தொடர்பு கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடலாம், குறிப்பாக அவை சூடுபடுத்தும் போது அல்லது அமில அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளுக்குப் பயன்படுத்தும் போது,  என்று அவர் விளக்குகிறார்.

பிளாஸ்டிக் உணவு கன்டெய்னர் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?

பிளாஸ்டிக் டப்பாவில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பிளாஸ்டிக் வகை PETE ஆகும், இது polyethylene terephthalate என்று அழைக்கப்படுகிறது, இது பொதுவாக ஒருமுறை பயன்பாடுகளுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, ஆனால் மீண்டும் பயன்படுத்த அல்லது சூடாக்குவதற்கு ஏற்றது அல்ல.

பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கு முன், அது உணவுக்கு பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க டாக்டர் ஜா பரிந்துரைக்கிறார்.

எந்த வகையான பிளாஸ்டிக் கன்டெய்னர் தவிர்க்க வேண்டும்?

பிளாஸ்டிக் கன்டெய்னர்கள் உணவை சேமித்து வைக்க பொதுவானதாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிரான முக்கிய பிரச்சினை பிளாஸ்டிக்கிலிருந்து, உணவுப் பொருட்களில் கசிவு ஆகும்.

எனவே, இயற்கையில் சூடான, எண்ணெய் மற்றும் அமிலத்தன்மை கொண்ட உணவுகளை ஒருபோதும் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் சேமிக்கக்கூடாது, ஏனெனில் அவை ரசாயனங்கள் இடம்பெயர்வதை ஊக்குவிக்கும்.

Safe food storage in plastic containers

food-grade அல்லது BPA-free என்று லேபிள் உள்ள பிளாஸ்டிக் கன்டெய்னர் தேடுங்கள்

பழைய, கீறல்கள் அல்லது சேதமடைந்த பிளாஸ்டிக் கண்டெய்னரை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் உணவில் ரசாயனங்கள் கசியும் அபாயம் அதிகம் என்று டாக்டர் ஜா கூறுகிறார்.

கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், சிலிகான், பீஸ்வேக்ஸ் மற்றும் மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்ட கண்டெய்னர், உணவைச் சேமிப்பதற்கு சிறந்த சில மாற்றுகள், அவை அனைத்தும் நச்சுத்தன்மையற்ற பொருட்களால் ஆனது,  அவை உணவைச் சேமிப்பதற்கு சிறந்தவை.

பிளாஸ்டிக் கன்டெய்னரில் உணவை சேமிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் என்ன?

food-grade அல்லது BPA-free என்று லேபிள் உள்ள பிளாஸ்டிக் கன்டெய்னர் தேடுங்கள். பிபிஏ (bisphenol A) என்பது ஒரு ரசாயனமாகும், இது சாத்தியமான உடல்நல அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

*பிளாஸ்டிக் கன்டெய்னரை, மைக்ரோவேவ் செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் வெப்பம் பிளாஸ்டிக்கிலிருந்து ரசாயனங்கள் வெளியாவதை துரிதப்படுத்தலாம்.

*பிளாஸ்டிக் கண்டெய்னரில் விரிசல், கீறல்கள் அல்லது சிதைவுகள் உள்ளதா என ஆய்வு செய்யவும்.

*சேதமடைந்த கன்டெய்னரில் ரசாயனங்கள் கசிவதற்கு அதிக வாய்ப்புள்ளது, எனவே மாற்றப்பட வேண்டும்.

* குறுகிய கால சேமிப்பிற்காக பிளாஸ்டிக் கண்டெய்னர் பயன்படுத்தவும், அதாவது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் நுகரப்படும் எஞ்சியவை.

வெவ்வேறு பிளாஸ்டிக் கண்டெய்னரில் பாதுகாப்பான பயன்பாட்டிற்கான மாறுபட்ட வழிகாட்டுதல்கள் இருப்பதால் manufacturer instructions பின்பற்றவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment