scorecardresearch

டாப்ல ஒரு கட்; அப்புறம் 6 கட்… மாதுளை ஈஸியா உடைக்க இதை ஃபாலோ பண்ணுங்க!

ஒரு நிமிடம் பழத்தை எல்லா பக்கங்களிலும் இருந்து மெதுவாக தட்டவும். இப்போது முன்பு வெட்டப்பட்ட பழ துண்டுகளை மெதுவாக பிரிக்கவும்.

lifestyle
Tips to peel Pomegranate

மாதுளம் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது, இது உடலை நச்சுத்தன்மை நீக்க உதவுகிறது. தினமும் மாதுளம் பழச்சாறு குடிப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

இப்படி மாதுளம் பழத்தில் ஏராளமான சத்துகள் இருந்தாலும் பலரும் அதை சாப்பிட விரும்புவதில்லை. அதற்கு காரணம் அதன் தோல் தான். மாதுளம் பழத்தின் தோலை உரித்து, ஒவ்வொரு முத்துகளாக எடுத்து சாப்பிடுவதற்குள் பலருக்கு எரிச்சலை வந்துவிடும். இன்னும் சிலர் யாராவது மாதுளம் பழம் தோலை உரித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் யோசிப்பார்கள்.

இனி எளிதாக மாதுளம் பழத்தை உரிக்கலாம். அதற்கு உங்களுக்கு தேவை ஒரு கத்தி, ஒரு சப்பாத்தி கட்டை. முதலில் அந்த மாதுளம் பழத்தின் காம்பு பகுதியை வெட்டி எடுக்கவும். பழத்தின் மேல் வெள்ளை அடுக்கை அகற்றி விதைகள் தெரியும்படி பார்த்துக் கொள்ளவும். பிறகு, பழத்தை சுற்றி நீளவாக்கில் ஆறு முறை கீறி விடவும்.

ஒரு நிமிடம் பழத்தை எல்லா பக்கங்களிலும் இருந்து மெதுவாக தட்டவும். இப்போது முன்பு வெட்டப்பட்ட பழ துண்டுகளை மெதுவாக பிரிக்கவும். ஒவ்வொரு பகுதியையும் ஒரு கிண்ணத்தில் வைத்து, ஒரு ஸ்பூன் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி முத்துகளை மெதுவாக வெளியே எடுக்கவும்.

இனி இந்த குறிப்பை பயன்படுத்தி மாதுளம் பழத்தோலை உரியுங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pomegranate benefits pomegranate peel uses

Best of Express