தமிழர் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டுகள்

Pongal games : தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், அறுவடை திருநாள் ஆகவும் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான "பொங்கல் திருநாளை' தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், அறுவடை திருநாள் ஆகவும் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான “பொங்கல் திருநாளை’ தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.இந்த பண்டிகைக்கு அடுத்த நாள் விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் பசுக்களையும், எருதுகளையும், விவசாயக் கருவிகளையும் வழிபடுகிறோம். அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற வீரவிளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

ஜல்லிக்கட்டு

 

தமிழகத்தில் தொன்றுதொட்டு “ஜல்லிக்கட்டு’ என்ற காளையை அடக்கும் வீரவிளையாட்டுகள் நடைபெற்றதாக, சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. கலித்தொகையில் இது “ஏறு தழுவல்’ எனக்குறிக்கப்பட்டுள்ளது.. மேலும், சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையிலும், சீவகசிந்தாமணியிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. எருது விளையாட்டு தொடர்பாக நடுகற்களும் காணப்படுகின்றன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டுதோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் ஜல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தவர்கள் அறிவர்.

வழுக்கு மரம்

ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப் புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.

கபடி ஆட்டம்

 

கிராமத்து மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும். ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக் கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும். அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்றுச் சிறப்பும் உடைய வீர விளையாட்டுகளைக் காலந்தோறும் நடைமுறைப்படுத்தி, வாழவைக்கவும் செய்வோம்…..

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close