scorecardresearch

அழகான சின்ன தேவதை! சித்தி 2 பிரீத்தி ஷர்மா டிரெண்டி கலெக்ஷன்

இப்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி ஷர்மா, வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் லக்னோ.

அழகான சின்ன தேவதை! சித்தி 2 பிரீத்தி ஷர்மா டிரெண்டி கலெக்ஷன்
Preethi sharma

சன் டி.வி.யில் தினமும் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரீத்தி ஷர்மா. அழகும், குறும்பும் ததும்பும் பிரீத்தி ஷர்மாவுக்கு இப்போது சோஷியல் மீடியாவில் ஏராளமான ஆர்மிகள் உள்ளன.

பிரீத்தி ஷர்மா, இந்தியாவில் டிக்டாக் செயலி இருந்தபோது நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். அதில் கிடைத்த புகழ் மூலம், தி ஹார்வெஸ்ட், எ நைட் வித் தி சஸ்பெக்ட்ஸ், தி மிரர் போன்ற பல குறும்படங்களில் நடித்தார்.

இப்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி ஷர்மா, வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் லக்னோ. இப்போது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் செட்டில் ஆகி விட்டனர். பிரீத்திக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். பிரீத்திக்கு நடிப்பு தவிர்த்து, நடனம், பாட்டு மிகவும் பிடிக்கும். பாடகியாக வேண்டும் என்பதுதான் பிரீத்தியின் கனவு. ஆனால் இப்போது டிராக் மாறி, நடிகையாகி விட்டார்.

பிரீத்தி ஷர்மா கியூட் போட்டோஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Preethi sharma photos chithi 2 serial sun tv