Advertisment

படித்த கல்லூரியில் பெஸ்டிஸ்- உடன் கூடிய விஜய் டி.வி பிரியங்கா: வீடியோ ரகளை

பிரியங்கா, கல்லூரியில் படித்த தன் தோழிகளுடன் அவுட்டிங் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vj priyanka

Vj priyanka

விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.  மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா, கல்லூரியில் படித்த தன் தோழிகளுடன் அவுட்டிங் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

2009ல எத்திராஜ் காலேஜ்ல ஒரு 5 பேரு, எங்களுக்கு பயம்னா என்ன தெரியாது, யாரை பார்த்தாலும் கவலை கிடையாது. உலகத்துல என்ன நடந்தாலும் நாங்க மதிச்சதே கிடையாது. அப்போ ஆரம்பிச்ச ஒரு அபூர்வமான உறவ இப்போவரை நாங்க தொடர்ந்துட்டு வர்றோம்.

Priyanka Deshpande

சாட் ஷாப் சென்று அங்கு தோழிகளுடன் பானி பூரி சாப்பிடும் பிரியங்கா, பிறகு அங்கிருந்து காரில் எத்திராஜ் கல்லூரிக்கு செல்கிறார்.

Priyanka Deshpande
Priyanka Deshpande

நாங்க 5 பேருமே நேத்து நைட், எங்க டைம் டிராவல் பண்ணி போனா சந்தோஷமா இருப்போம் ஒரு கேள்வி கேட்டுகிட்டோம். நாங்க எல்லாருமே சொன்ன பதில் எத்திராஜ் காலேஜ்க்கு மறுபடியும் போகணும்

அப்போ லைஃப் ரொம்ப சிம்பிளா இருந்தது, எங்களுக்கு அப்போ டென்ஷன், ஸ்ட்ரெஸ் கிடையாது. காலேஜ்ல வர்ற ஃபிரெண்ட்ஸ்தான் வாழ்க்கை முழுக்க வருவாங்க.. என் தோழிங்கதான் என்னோட லைஃப்ல ஃபாரெவர்.

இப்படி பல விஷயங்களை பிரியங்கா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment