சன் டி.வி. ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இப்போது ஜீ தமிழ் டி.வி.யின் சீதா ராமன் என்ற புதிய சீரியலில் நடிக்கிறார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி பிரியங்கா சமீபத்தில் கோவாவுக்கு தோழிகளுடன் டூர் சென்ற போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க..











கோவா ஸ்பெஷல்
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது கோவா மாநிலம். இது இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமாகும். சுமார் 450 ஆண்டு காலம் போர்ச்சுக்கீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த இந்த மாநிலத்தின் கலாச்சாரம் போர்ச்சுக்கீசியர்களின் பழக்க வழக்கங்களை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.
கோவா கேண்டலிம் பகுதியில் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இங்கு நீர் விளையாட்டுக்களில் பொழுதை கழிக்கலாம். பாகா கடற்கரையில் அமைந்துள்ள பிரிட்டோஸ் என்ற அழகான குடில்கள், அஞ்சுனா கடற்கரை இங்கு மிகவும் புகழ் பெற்றவை. கோவாவின் தெற்கு பகுதியில் கடற்கரையோரம் அமைந்த அழகான தேவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவை
விடுமுறையை இனிதாகக் கழிக்க விரும்புவோருக்கும், கடற்கரை விரும்பிகளுக்கும் நிச்சயம் கோவா உங்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“