Advertisment

ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாம இங்க வந்த என்ன.. சன் டிவி ரோஜா உருக்கம்

இந்த 4+ வருடங்கள நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க! உங்களோட அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல- பிரியங்கா

author-image
abhisudha
Dec 02, 2022 14:08 IST
Priyanka Nalkari

Priyanka Nalkari

சன் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் இறுதி அத்தியாத்தை எட்டியுள்ளது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Advertisment

இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார்.

சை சை சயாரே, கிர்ராக் கிட்ஸ், ஷிரிடி சாய் கதா, மேகமாலா மற்றும் பாபாய் ஹோட்டல் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து தெலுங்கு மக்களிடையே பிரபலமானார்.

தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி ரோஜா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக எழுதிய ஒரு பதிவு பார்ப்போரை உருக வைத்துள்ளது.

சன் டிவியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த பட த்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரோஜா அதில்;

என் வாழ்க்கைல இந்த 4+ வருடங்கள் மறக்க முடியாத பயணம்! ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியமா இங்க வந்த என்ன, நீங்க எல்லாரும் உங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிட்டீங்க!

இந்த 4+ வருடங்கள நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க! உங்களோட அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல, ஆனா இந்த அன்பிற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்!

சீரியலில் மட்டுமின்றி, உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க, எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சரிகம மற்றும் சன் டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நிறைய நல்ல நியாபகங்ளோட நிறைய நல்ல உள்ளங்களோட அன்பு, ஆசீர்வாதத்தோட, நான் ரோஜாவில் இருந்து விடைபெறுகிறேன்

இது முடிவில்லை! இன்னொரு புதிய ஆரம்பம்! விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்!

என்றும் அன்புடன்

பிரியங்கா நல்காரி # ரோஜா.. என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களை ரொம்ப மிஸ் செய்ய போவதாக கூறி வருகின்றனர்.

அர்ஜுன் மற்றும் ரோஜா ஒரு வேண்டுகோள் நீங்க வேற ஒரு சீரியல்ல வந்தாலும் அதுலயும் நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா இருக்கணும் ரோஜூன் ரசிகர்கள் ஆசைப்படுறோம் என்றும்,

எங்க ரோஜுன் இல்லாம அந்த நாள் முழுமையாகது. ஒரு நாள்ல எதை மறந்தாலும் 9 மணியை மறக்க முடியாது, எங்க கியூட்டிஸ் ரோஜூன மறக்க முடியாது என கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment