மகளானாலும் அவர் என்னை விட உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தந்தை!

என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது பெருமையாக இருந்தது

தன்னைவிட உயர் பதவியில் இருக்கும் மகளுக்கு  கடமை தவறாமல்  சல்யூட் அடித்த ஒரு போலீஸ் தந்தையின்   நெகிழ்ச்சி பதிவு இது.

சல்யூர் அடித்த போலீஸ் தந்தை:

காவல் துறை மட்டுமில்லை எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் , உயர் அதிகாரிகளுக்கு  அவரின் கீழ் வேலை செய்பவர்கள் சல்யூட் அடிப்பது, வணக்கம் செய்வது வழக்கமான ஒன்று. அப்படி கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து பழகியவர் தான் தெலுங்கானாவை சேர்ந்த காவல்துறை துணை ஆணையர் உமாமகேஸ்வர சர்மா.

இத்தனை வருட உழைப்பில் பல அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கும் போது வாராத ஒரு கண்ணீர் முதன்முறையாக மாவட்ட எஸ்.பியாக தனது மகள் கம்பீரத்துடன் வந்து நிற்கும் போது, உயர் அதிகாரி என்ற முறையில் அவருக்கு சல்யூட் அடிக்கும் போது வந்தது. அதுவும் ஆனந்த கண்ணீர் தான்.

உமாமகேஸ்வரராவின் மகள் சிந்து சர்மா. கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வு பெற்றார். சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொங்கலா காலன் பகுதியில் நேற்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் பிரமாண்டமான மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பாதுகாப்புப் பணிக்காக, உமாமகேஸ்வர ராவும், அவரின் மகள் சிந்து சர்மாவும் ஒரே இடத்தில் பணியாற்றினார்கள்.

தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தன்னைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து பெருமையுடன் உமாமகேஸ்வரராவ் சல்யூட் அடித்தது உணர்வு மிகு தருணமாக அமைந்தது.

மகள் என்று கருதாமல், தன்னை விட உயர் அதிகாரி வந்தது, உடனே எழுந்து நின்று உமாமகேஸ்வர சர்மா, தனது எஸ்.பியான சிந்துவிற்கு சல்யூட் அடித்தது அங்கிருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளையும் திகைக்க வைத்தது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவ தொடங்கின.

தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வைரலானது. போலீஸ் தந்தையான சர்மாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிய தொடங்கினர். இதுக் குறித்து மனம் திறந்துள்ள காவல் துணை ஆணையர் சர்மா, “ முதல் முறையாக நானும், எனது மகளும் ஒரே இடத்தில் பணியாற்றினோம். எனக்கு மேலதிகாரியாக என் மகள் நியமிக்கப்பட்டார். நான் அவரைப் பார்த்தபோது, என் உயர் அதிகாரி என்பதால், அவருக்கு சல்யூட் அடித்தேன்.

அப்போது அவரும் மகள் என்ற முறையைக் காட்டிலும், ஒரு போலீஸ் எஸ்.பி. என்ற ரீதியில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இது குறித்து ஒருவொருக்கொருவர் ஆலோசிக்கவில்லை. வீட்டுக்குச் சென்றால், தந்தை, மகளைப் போலத்தான் பழகுவோம். என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது பெருமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close