ரூ. 30 லட்சத்திக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்: ஏனாம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி

ஆரம்பத்தில் சீரா மீன் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளிக்கிழமை அதன் விலை லிட்டருக்கு ரூ. 1000-க்கு விற்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சீரா மீன் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளிக்கிழமை அதன் விலை லிட்டருக்கு ரூ. 1000-க்கு விற்கப்பட்டுள்ளது.

author-image
Martin Jeyaraj
New Update
Puducherry Yanam Rare fish variety Cheeramenu sold for Rs 30 lakhs Tamil News

சீரா மீன்கள் அளவையில் லிட்டரில் விற்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சீரா மீன் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

புதுச்சேரியின் பிராந்தியங்களுள் ஒன்றாக ஏனாம் இருக்கிறது. தெலுங்கானாவில் கிழக்கு கடற்கரையில் இப்பகுதியில் பருவ மழையால் சீரா மீன்கள் அதிகமாக கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த சீரா மீன்கள் இன்று 30 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனால் கோதாவரி கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisment

சீரா மீன்கள் 'சீரா மீனு' என்றும் அழைக்கப்படுகிறது. அந்த காலங்களில் சீரா மீன்களை மீனவ பெண்மணிகள் சேலையில் பிடிப்பது வழக்கம். இறால் தீவன வலைகள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மீன்கள் அறுசுவை உடையது. உடலுக்கும் நன்மை  சேர்க்கும். இந்த மீன்கள் ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன, தற்போது வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், இந்த சீரா மீன்கள் வருகை ஆந்திரா, தெலுங்கானா பகுதியான கோதாவரி ஆற்று பகுதியில் அதிகமாக கிடைத்ததுள்ளது. 

சீரா மீன்கள் அளவையில் லிட்டரில் விற்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சீரா மீன் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று வெள்ளிக்கிழமை அதன் விலை லிட்டருக்கு ரூ. 1000-க்கு விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீரா மீன்கள் நல்ல விலையில் விற்பனை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: