Advertisment

நீங்கள் அடிக்கடி வீங்கிய முகத்துடன் எழுந்திருக்கிறீர்களா? குடல் பிரச்னை இருக்கலாம்

ஒருவருக்கு தொடர்ந்து வீக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது காலத்தின் தேவை என்று டாக்டர் மேக்ராஜ் இங்கிள் கூறினார்.

author-image
WebDesk
New Update
lifestyle

Puffy face and Gut health

வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய செரிமான பிரச்சனைகள், குடலில் உள்ள அடிப்படை பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் முகத்திலும் எதிரொலிக்குமா?.

Advertisment

உங்கள் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சில உணவுகள், முகத்தில் திரவத்தைத் தக்கவைக்க வழிவகுக்கும். நன்றாக நீரேற்றம் இல்லாதது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும், என்று உணவியல் நிபுணர் ரிச்சா கங்கானி கூறினார்.

உங்கள் கல்லீரல் நெரிசல் ஏற்பட்டால், அது உங்கள் உடலில் நச்சு குவிவதற்கு வழிவகுக்கும், இது வீக்கம் மற்றும் திரவம் தக்கவைப்பை ஏற்படுத்தும். காலையில் வீங்கிய முகத்துடன் எழுந்திருப்பது இதன் பொதுவான அறிகுறியாகும், என்று இன்ஸ்டாகிராமில் அவர் கூறினார்.

இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளின் பெற முடிவு செய்தோம்.

செரிமானப் பாதை மற்றும் தோல் ஆகியவை குடல்-தோல் இணைப்பு (gut-skin connection) எனப்படும் உறவைக் கொண்டுள்ளன என்று டாக்டர் சந்தோஷ் பாண்டே கூறினார்.

நிணநீர் மண்டலம் (lymphatic system) உங்கள் உடலில் உள்ள வடிகால் அமைப்பு போன்றது. இது உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. உங்கள் நிணநீர் மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால், அது உடலில் நச்சுகள் குவிவதற்கு வழிவகுக்கும், இது வீக்கம் மற்றும் திரவம் தக்கவைப்பை ஏற்படுத்தும், இது காலையில் வீங்கிய முகத்தை ஏற்படுத்தும், என்று டாக்டர் பாண்டே கூறினார்.

குடல் நுண்ணுயிர் (gut microbiome) என்பது உங்கள் குடலில் காணப்படும் பாக்டீரியா ஆகும், இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாக உங்கள் சருமத்தையும் பாதிக்கிறது. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை பெரும்பாலும் நல்ல பாக்டீரியாவை அடக்கும் அல்லது கெட்ட பாக்டீரியாக்களின் செறிவை அதிகரிக்கும் பொருட்களைக் கொண்டிருக்கின்றன, என்று டாக்டர் பாண்டே கூறினார்.

publive-image

செரிமான பிரச்சனைகள், குடலில் உள்ள அடிப்படை பிரச்சினைகளைக் குறிக்கலாம்

ஒருவருக்கு தொடர்ந்து வீக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது காலத்தின் தேவை என்று டாக்டர் மேக்ராஜ் இங்கிள் கூறினார்.

இந்த அறிகுறிகள் சமரசம் செய்யப்பட்ட குடலைக் குறிக்கலாம்.

பெரும்பாலான மக்கள் வீங்கிய முகத்துடன் எழுந்திருப்பார்கள், இது அவர்களை களைப்பாகவும் சோர்வாகவும் காட்டும். ஒருவர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், என்று டாக்டர் இங்கிள் கூறினார்.

என்ன செய்வது?

முகம் வீக்கத்தில் இருந்து விடுபட, கங்கானி பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்:

* சோடியம் அதிகம் உள்ள உணவுகளை, குறிப்பாக மாலை அல்லது இரவில் தவிர்க்கவும்

* சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை நாளின் பிற்பகுதியில் தவிர்க்கவும்

* உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து அதிகம் சாப்பிடுங்கள்

*அதிகமாக தூங்குவதை தவிர்க்கவும்

* முதுகு கீழே இருக்கும்படி தூங்கவும்

* நாள் முழுவதும் நீரேற்றமாக இருங்கள்

முக்கியமாக இரவு நேரங்களில் சோடியம் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருப்பது கட்டாயம் என்று வலியுறுத்திய டாக்டர் இங்கிள், ரீஃபைண்டு கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

போதுமான நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக்குகளை சாப்பிடுங்கள். குடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைபிடித்தல் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்கவும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும், இரவில் நன்றாக தூங்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற போதுமான தண்ணீர் குடிக்கவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும், மன அழுத்தமின்றி இருக்கவும் முயற்சி செய்யுங்கள்.

மேலும், உடற்பயிற்சி செரிமானத்தை மேம்படுத்தும் குடலின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது, என்று டாக்டர் பாண்டே கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment