Puli sadam Tamil, Puli sadam Making Video In Tamil: கோவில் புளியோதரை சிலருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விடும். அதே சுவையுடன் வீட்டில் செய்ய முடியுமா? என்கிற சந்தேகம் இருக்கலாம். சரியான முறையில் செய்தால், புளியோதரை டேஸ்ட் செமையா இருக்கும்.
புளியோதரை என்கிற புளி சாதம், நீண்ட பயணத்திற்கும் அவசரமான மதிய உணவுக்கும் ஏற்றது. திடீரென 10 பேருக்கு உணவு சமைக்க வேண்டுமென்றால், வேறு எதையும் விட இது சுலபம். எனவே புளி சாதம் செய்முறை அனைவரும் அறிந்திருப்பது அவசியம்.
Puli sadam Making Video In Tamil: புளியோதரை
புளிசாதம் என்கிற புளியோதரை செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வடித்து ஆற வைத்த உதிரியான சாதம் – 2 கப், புளி – 100 கிராம், மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன், உப்பு, எண்ணெய் – 2 ஸ்பூன், நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க : காய்ந்த மிளகாய் – 6, கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 டீ ஸ்பூன், கறிவேப்பில்லை – சிறிது, வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடிக்க வேண்டியவை : தனியா – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், வெந்தயம் – 1/2 டீ ஸ்பூன்
செய்முறை : ஆற வைத்த உதிரி சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும். புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும். புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள் ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும். ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும். 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.
முயற்சித்துப் பாருங்கள்!