தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது அனிதா குப்புசாமி தம்பதி தான்.
Advertisment
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது. 1,500 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர்.
இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அப்படி, அனிதா யூடியூப் ஷார்ட்ஸில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒன்னும் ஆகாது. நம்ம வாட்டர் ப்ரூஃப் மட்டும் பண்ணிக்கனும். அப்படி பண்ணிட்டா பிரச்னையே கிடையாது. நல்ல இருக்கும். பிளாட்ல இருக்கிறவங்க தான் நாங்க தோட்டம் வைக்க முடியலைன்னு ரொம்ப கவலைப்படுறீங்க…
உங்க வீட்டுல வறண்டா இருந்தா துளசி, சோற்றுக்கற்றாழை வைக்கலாம். இப்படி நிழல்ல வளரக்கூடிய செடிகளாக பார்த்து வச்சா நம்முடைய ஆசைகளை தீர்த்துக்க முடியும். நான் அப்படித்தான் ஆரம்பிச்சேன்.
மொட்டை மாடித் தோட்டத்தை காண்பிங்கனு நீங்க அடிக்கடி கேட்கிறீங்க.
நாங்க 25 வருஷத்துக்கும் மேலாக மொட்டை மாடித் தோட்டம் வச்சுருக்கோம்’, என்று அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“