தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அனிதா, புஷ்பவனம் குப்புசாமி தான். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார்.
பல்லவி பாடகர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். இவரது கணவர் கௌதம் ராஜேந்திர பிரசாத் ஒரு ஐடி நிபுணர்
பல்லவி சமீபத்தில் தன் கணவருடன் வயநாட்டுக்கு டூர் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
வயநாடு
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமான மலைத்தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் பசுமையான பசுமைக்கு புகழ் பெற்றது.
வயநாடு காடுகள், பச்சை புல்வெளிகள், மூடுபனி மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, மேலும் மழையின் போது இப்பகுதி முழுவதும் பரந்து காணப்படும் அழகிய நீர்வீழ்ச்சிகளுடன் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கிறது.
சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி, மீன்முட்டி நீர்வீழ்ச்சி, கந்தன்பாறை, செத்தலயம், கடச்சிக்குன்னு, பால்ச்சுரம் மற்றும் துஷாரகிரி அருவிகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
அடுத்தமுறை கேரளாவுக்கு டூர் போகும் போது இந்த இடத்துக்கு மறக்காம போயிட்டு வாங்க…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil