விஜய் டிவியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கதிரவன், மகேஷ்வரி, அமுதவானன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம், ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ஷெரினா, ஆயிஷா, ராபர்ட், அசீம், சிவின் கணேசன், அசல், ஜிபி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisment
இதில் ஆரம்பத்திலே பலரையும் கவர்ந்தவர் குயின்சி ஸ்டான்லி. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட குயின்சி, கல்லூரி 2வது ஆண்டு படிக்கும்போது மாடலிங் துறையில் நுழைந்தார். பாண்ட்ஸ், ஹமாம், லைஃப் பாய், வைல்ட் மிலன் போன்ற சர்வதேச இந்திய பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாக இருந்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு வெளியான கருப்பு கண்ணாடி படத்தின் மூலம் குயின்சி கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவியின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையிலும் அறிமுகமானார்.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த தனிமை அது வரமா என்ற மியூசிக் வீடியோவிலும் குயின்சி நடித்திருந்தார். பிறகு 2022ல் வெளிவந்த காஃபி 50 காதல் 50 என்ற குறும்படத்திலும், விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடிகர் விக்ராந்த் உடன் சேர்ந்து குயின்சி நடித்தார்.
Advertisment
Advertisements
2022ல், இந்தியன் ஃபேஷன் டிராவல் இண்டர்நெஷனல் (IFTIA) விருதையும் குயின்சி வென்றார். இப்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியளாராக குயின்சி கலந்து கொண்டிருக்கிறார்.
குயின்சி ஸ்டான்லி கியூட் போட்டோஸ் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“