தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா இப்போது பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இங்கே பாருங்க..











பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரம், உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.
1889ல் கட்டி முடிக்கப்பட்டு, இன்றும் உலகப்புகழுடன் திகழும் ஈபிள் டவர், லுாவர் அரண்மனை மியூசியம், பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களில் பங்கெடுத்து மரணமடைந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட டிரயம்பல் ஆர்ச், நாட்ர டேம் கத்தோலிக்க மாதா பேராலயம், லொரன்ஸரி மியூசியம், பிகாசோ மியூசியம், பான்ட் அலெக்சாண்டிரி பாலம் என நகர் முழுவதும் விரிந்து பரந்திருக்கிறது, பிரான்சின் பாரம்பரியம்!
அன்பை பரிமாறிக்கொள்ளும் காதல் ஜோடிகளும், புதுமண தம்பதியரும் ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர உகந்த இடம் பாரிஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“