ஈசியா இப்படி செய்யுங்க ராகி புட்டு. செம்ம சுவையான ரெசிபி இது.
ராகி புட்டு செய்யத் தேவையான பொருட்கள்
ராகி மாவு -1 கப்
உப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -1 கப்
நெய் -1டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு -10
உலர்ந்த திராட்சை- 10
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
ராகி புட்டு செய்முறை: உப்புடன் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, சிறிது சிறிதாக மாவு மீது தண்ணீரைத் தூவி, நொறுக்குத் தன்மையுடன் நன்கு கலக்கவும். இப்படி தயார் செய்த பிறகு புட்டு செய்ய மாவு தயராக இருக்கும்.பின்னர், இட்லி பாத்திரத்தை தயார் செய்து கொண்டு அதில் இட்லி மாவுக்கு பதில் புட்டு இடவும். வெள்ளை துணியில் முதலில் தேங்காய் துருவல் பின்னர் மாவு, பிறகு தேங்காய் துருவல் அதன் பின் மாவு என அடுக்கடுக்காக சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து கீழே இறக்கவும்.இப்படி புட்டு நன்றாக வெந்த பிறகு, அவற்றோடு வறுத்த முந்திரி பருப்பு, உலர்திராட்சை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ருசித்து மகிழவும்.