நீலாம்பரி, ராஜமாதா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட வெவ்வேறு மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரையில் தனது வசீகரமான ஆளுமை மற்றும் அசத்தலான நடிப்புக்காக ரம்யா, 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 3 நந்தி விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இருப்பினும், பாகுபலியில், 'சிவகாமி தேவி' என்ற பாத்திரம் அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை அளித்தது. இப்போது ரம்யா ஜெயிலர் படத்தில் மீண்டும் ரஜினிகாந்த்துடன் நடிக்கிறார்.
இப்படி ரம்யா கிருஷ்ணன், ஒருபக்கம் நடிப்பு அசூரியாக இருந்தாலும், மறுபக்கம் அவர் ஸ்டைலுக்காகவும் விரும்பப்படுகிறார். அவரது ஹேர் ஸ்டைல் முதல், டிரெஸ்ஸிங் வரை, 4 தசாப்தங்களை கடந்தும் இன்றும் ரம்யா கிருஷணன் இளம்பெண்களின் ஃபேஷன் ஐகானாக வலம் வருகிறார்.
படையப்பா படத்தில் வரும், ’வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் மாறல’ எனும் வசனம் ரஜினியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு தான் பக்காவாக பொருந்தும். அப்படி தன் 51 வயதிலும், இப்போதுள்ள ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவுக்கு ரம்யா இன்றும் அதே இளமையுடனும், துடிப்புடனும் இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் அடிக்கடி தன் போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அவையனைத்தும் பயங்கர வைரலாகும்.
அப்படி ரம்யா, சமீபத்தில் பகிர்ந்த ஒரு புடவை போட்டோஷூட் தான், இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அந்த புடவையின் விலை தான்.
ரம்யா அணிந்திருந்த புடவையின் விலை, சுமார் 1.25 லட்சம் ரூபாய். அதை பார்த்த பலரும், அது என்ன புடவை, அப்படி அந்த புடவையில் என்ன இருக்கிறது என ஆராய ஆரம்பித்து விட்டனர்.
அந்த போட்டோஷூட்டில் ரம்யா அணிந்திருந்தது டோரனி பிராண்டின், ரூபி ரெட் எம்பிராய்டரி ஜார்ஜெட் புடவை. இது, ஜார்ஜெட், தூய பட்டு வெல்வெட், மற்றும் தூய பருத்தி பட்டில், எம்பிராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டது. இது ஆன்லைனிலும் கிடைக்கிறது.
ரம்யா இதற்கு மேட்சிங் ஆக, புடவையின் நிறத்தில் பல, வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு டிசைனர் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையை அணிந்திருந்தது இந்த சேலையை இன்னும் தனித்துக் காட்டியது.
உங்களுக்கும் இந்த புடவை பிடித்திருக்கிறது என்றால், கீழே உள்ள லிங்க் சென்று பாருங்கள்!
https://www.perniaspopupshop.com/torani-ruby-red-embroidered-georgette-saree-torc0222149.html
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“