ரம்யா பாண்டியன், தனது போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறார். ரம்யா பாண்டியன், மம்முட்டி நடிப்பில் கடைசியாக வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
ரம்யா பாண்டியன் சமீபத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில்,” காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்டது, இது தென்னிந்தியாவில் 700CE இல் வலிமைமிக்க பல்லவன் மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்ஹா) மூலம் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டமைப்பு கோயில் என்று நம்பப்படுகிறது.
இந்த கோயில் தான் மாவீரன் ராஜ ராஜ சோழனுக்கு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்ட உத்வேகம் அளித்தது என்பது மனதைக் கவரும் உண்மை. அந்தளவுக்கு இந்த கோவிலின் கட்டிடக்கலை அற்புதம் (அதிசயம்”) என்று ரம்யா, அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த போட்டோஸ் இங்கே










மேலும் தனது அக்கா சுந்தரி மற்றும் தங்கை கீர்த்தி பாண்டியனுடன் திருவண்ணாமலை சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த போது எடுத்த படங்களையும் ரம்யா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.




“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“